[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஈரோடு: சித்தோடு அருகே தயிர்பாளையத்தில் வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் 3 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS தினகரனை சிகரத்திற்கு கொண்டு செல்ல என் சிறகுகளை நான் அசைத்தேன்- நாஞ்சில் சம்பத் ட்வீட்
  • BREAKING-NEWS தமிழகம் தற்போது தலைவன் இல்லா நாடாகவும், தகப்பன் இல்லா வீடாகவும் உள்ளது- சீமான்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த 35 தினங்களாக கிராம மக்கள் தொடர் போராட்டம்
  • BREAKING-NEWS சசிகலா கணவர் நடராஜனுக்கு செயற்கை சுவாசம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
  • BREAKING-NEWS காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தஞ்சையில் மார்ச் 25ஆம் தேதி உண்ணாவிரதம் - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS சவாலான நேரத்தில் காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட ராகுல் காந்திக்கு வாழ்த்து - சோனியா காந்தி

பனையின் நன்மைகளும், நுங்கின் மருத்துவ குணங்களும்

palm-tree-nungu-health-tips

கோடை காலங்களில் நுங்கு சாப்பிடுவதால் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும். நுங்கு மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி, எண்ணற்ற மருத்துவ குணங்கள் கொண்டவை.

நுங்கு சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து பார்க்கலாம், சாதாரணமாக நுங்கு சாப்பிடுவதே சுவாரசியமான ஒன்று. அதுவும் கிராமங்களில், பனை மரத்தடியில் அமர்ந்து புதிய நுங்கை சுவைப்பது அனைவருக்கும் விருப்பமான ஒன்று. அந்த மகிழ்ச்சியை கிராமத்தில் அனுபவித்தவர்களுக்கே புரியும். தண்ணீரை அடிக்கடி குடிப்பது பலருக்கு சலிப்பை ஏற்படுத்தும். நுங்கு சாப்பிட சுவையாகவும் இருக்கும், சிற்றுண்டி போலவும் சாப்பிடலாம். அப்படிப்பட்ட நுங்கை சாப்பிடுவது உடலுக்கு பல நன்மைகள் தரக்கூடியது.

கோடை காலங்களில் உடலில் உள்ள நீரின் அளவு விரைவாக குறைந்து, நாம் சோர்வடைந்து விடுவோம். நுங்கில் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்து அதிகம் உள்ளது. உடலின் கனிமச்சத்து மற்றும் சர்க்கரையின் அளவை சீராக வைத்து, சுறுசுறுப்புடன் செயல்படுவதற்கு பெரிதும் உதவியாக இருக்கும். அதுமட்டுமின்றி, இதில் வைட்டமின் பி, இரும்புச்சத்து, கால்சியம், ஜிங்க், பொட்டாசியம் போன்ற பல்வேறு சத்துக்களும் உள்ளது.

அதிலும் கோடையில் அதிகப்படியான வெப்பத்தினால் சின்னம்மை வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அப்போது நுங்கு சாப்பிட்டால், சின்னம்மையினால் ஏற்படும் அரிப்புக்களை தடுத்து, உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளலாம். சின்னம்மை வராமல் தடுக்க வேண்டுமானாலும் சரி, வந்த சின்னம்மையை விரைவில் குணப்படுத்தவும் சரி, நுங்கு பெரிதும் உதவியாக இருக்கும். சிலருக்கு வெயிலில் செல்லும் போது அடிக்கடி மயக்கம் ஏற்ப்படும். அத்தகையவர்கள் நுங்கு அதிகம் சாப்பிட்டால், உடலின் நீர்ச்சத்து அதிகரித்து, மயக்கம் ஏற்படுவது குறையும். கர்ப்பிணிகள் நுங்கு சாப்பிட்டால், செரிமானம் அதிகரிப்பதுடன், மலச்சிக்கல் மற்றும் வாயு தொல்லை போன்ற பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். நுங்குவில் உள்ள சரியான கனிமச்சத்துக்களும், ஊட்டச்சத்துக்களும், உடலின் குளுக்கோஸ் அளவை சீராக வைத்து, உடலை சுறுசுறுப்புடன் வைத்துக் கொள்ள உதவும்.

வறட்சியான இடங்களிலும் வளரக்கூடிய, இவ்வளவு மருத்துவகுணங்கள் நிறைந்த பனை மரங்கள் தமிழகத்தில் குறைந்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. முன்பெல்லாம் பேருந்தில் செல்லும் போது தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பனை மரங்களை பார்க்க முடியும். ஆனால் தற்போது பார்க்க முடியவில்லை என்பதிலிருந்தே பனை மரங்கள் பெரும்பாலும் அழிக்கப்பட்டு விட்டதை தெரிந்துகொள்ள முடிகிறது. பனை மரங்கள் மண் அரிப்பை தடுக்கும் என்பது கூடுதல் தகவல். இப்படிப்பட்ட பனையை அழிய விடாமல், அதை மக்கள் ஆர்வமுடன் வளர்க்க வேண்டும்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close