[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS இந்தியா-தென் ஆப்ரிக்கா அணிகள் இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது
  • BREAKING-NEWS ரஷ்யாவில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அமித் பங்கால் வெள்ளிப் பதக்கம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
  • BREAKING-NEWS விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்

காலங்கள் தாண்டி வாழும் ஓர் சகாப்தம்.... இன்று தந்தை பெரியாரின் நினைவு நாள்..!

today-periyar-memorial-day

மூட நம்பிக்கையை ஒழித்துத் தன்னம்பிக்கையை விதைத்த பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 43 ஆவது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

வெங்கட ராமாசாமி என்ற இயற்பெயருடைய பகுத்தறிவுப் பகலவன் வாழ்வில் ஆற்றிய தொண்டினால் பின்பு அனைவராலும் தந்தை பெரியார் என்ற அழைக்கப்பட்டார். இவர் 1879 செப்டம்பர் 17 ஆம் தேதி ஈரோட்டில் பிறந்தார். மனிதகுல வரலாற்றில் தன் மக்களின் விடியலுக்காகப் போராடிய மாமனிதர். இவர் ஈ.வெ.ரா, ஈ.வெ.இராமசாமி நாயக்கர் என்ற பெயர்களாலும் தந்தை பெரியார், வைக்கம் வீரர் என்ற புனைப்பெயர்களாலும் அறியப்படுகிறார்.

இந்திய விடுதலையில் பங்காற்றி, மதுவிலக்குக் கொள்கைகளை காந்திக்கு எடுத்துரைத்து, சுயமரியாதை இயக்கத்தை கட்டமைத்தவர். சீர்திருத்த திருமணம் என்ற ஒரு புதிய வாழ்க்கை ஒப்பந்த முறைக்கு வித்திட்டவர். யார் கடவுள்.? பக்திக்கு பலி கேட்பவனா.? பசிக்கு உணவு அளிப்பவனா.? என உறக்க சொன்னவர்.

மாபெரும் சிந்தனையாளரான பெரியார் எதையும் ‘ஏன்? எதற்கு? எப்படி?’ என்று கேட்க தூண்டியவர். முதன்முறையாகத் தீண்டாமைக்கு எதிரான முழுமையான பொதுக் கிளர்ச்சியை தொடங்கியவர். தமிழர்கள் வாழும் நாடு தமிழருக்கே என முழக்கமிட்டு திராவிட கழகத்தை நிறுவியவர். அழியாத வரலாற்றின் அறிஞரான தந்தை பெரியார், டிசம்பர் 24, 1973 ஆம் ஆண்டு தனது 94 வது வயதில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close