[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கையில் 8வது அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் 81.52% வாக்குகள் பதிவாகியுள்ளன
  • BREAKING-NEWS ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்து அனில் அம்பானி ராஜினாமா செய்தார்
  • BREAKING-NEWS கேரளா: மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறப்பு
  • BREAKING-NEWS இலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு
  • BREAKING-NEWS இலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு: 4 மணி நேரத்தில் 50 சதவிகிதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவானதாக தகவல்
  • BREAKING-NEWS கோவாவில் மிக் ரக பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது: விமானிகள் இருவரும் பாதுகாப்பாக தப்பினர்
  • BREAKING-NEWS கனமழை காரணமாக நெல்லை நடுவக்குறிச்சி குளக்கரையில் பல இடங்களில் உடைப்பு

இலவசம் இல்லை.. போன்கால்க்கு 6 பைசா - ஜியோ செய்தது சரியா?

is-right-jio-activity

செல்போன் பயன்பாட்டினை பொறுத்தவரை ஒரு காலத்தில் ஏர்டெல், வோடோஃபோன், பிஎஸ்என்எல், ஏர்செல் போன்ற நெட்வொர்க் நிறுவனங்கள் கோலோச்சி வந்தன. ஆனால், எப்போது இவர்களுக்கு போட்டியாக ஜியோ சிம் கார்டு களத்தில் இறங்கியதோ, அப்போதே மற்ற நெட்வொர்க் நிறுவனங்களின் சரிவு தொடங்கிவிட்டது. ஏனெனில், இணையதள சேவையை இலவசமாக அள்ளிக் கொடுத்தது ஜியோ. வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம். அதனால், ஏராளமானோர் ஜியோ சிம் வாங்கினர். 

இந்நிலையில், தற்போது ஒரு போன் காலுக்கு 6 பைசா கட்டணம் வசூலிக்க ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முடிவு செய்துள்ளது. ட்ராய் நிறுவனத்தின் வலுக்கட்டாயமான அறிவுறுத்தலை அடுத்து ஜியோ இந்த முடிவை எடுத்துள்ளது. 

ஜியோ செய்தது சரியா என்ற கோணத்தில் ஃபேஸ்புக் பதிவாளர் ஒருவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில், “VOIP அதாவது Voice Over Internet Protocol என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தான் ஸ்மார்ட் போன்கள் வைத்திருப்பவர்களுக்கு செல்போன் நிறுவனங்கள் தங்கள் அனைத்து சேவைகளையும் வழங்கி வந்தன.

 VOIP- Voice Over Internet Protocol என்றால் இன்டர்நெட் சேவைகள் மூலம் வாய்ஸ் கால்கள் தருவது. ஜியோவும் இதைத்தான் செய்தது. ஒரே ஒரு வித்தியாசம். ஜியோ வாய்ஸ் கால்களை இலவசமாகத் தந்தது. ஜியோவால் எப்படி இலவசமாக தர முடிந்தது?

இன்டர்நெட் மூலமாகத் தானே வாய்ஸ் கால்களும் செயல்படுகின்றன. மக்கள் ரீசார்ஜ் செய்யும் பணத்தில் இன்டர்நெட் டேட்டாவை மட்டும் தந்து விடுவோம். இன்டர்நெட் இருந்தால் வாய்ஸ் கால்கள் தானாகவே இலவசமாக வந்துவிடும் அல்லவா. அதற்கு எதற்கு தனியாக கட்டணம் வசூலிக்க வேண்டும்? என்று இன்டர்நெட் சேவைக்கு மட்டுமே கட்டணங்களை வகுத்தது.

ஜியோ வருகைக்கு முன்னர் இதர செல்போன் நிறுவனங்கள் முக்கியமாக ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் VOIP தொழில்நுட்பத்தைத் தான் பயன்படுத்தி வந்தன. ஆனால் அதன் பலனை மக்களுக்குத் தராததோடு, இன்டர்நெட் பயன்பாட்டுக்கு ஒரு கட்டணம், வாய்ஸ் கால்களுக்கு தனி கட்டணம் என வசூலித்து வந்தன.

ஜியோ VOIP தொழில்நுட்பத்தை பகிரங்கப்படுத்தி அதன் பலனை நேரிடையாக மக்களுக்குத் தந்தது. அதனால் அவுட்கோயிங் கால்கள் இலவசமாக வந்தன. அதோடு ஒரு நாளுக்கு குறைந்தது 1.5 GB டேட்டாவும் இலவசமாக வந்தது.

ஒரு நெட்வொர்க்கில் இருந்து மற்ற நெட்வொர்க்கிற்கு போன் செய்தால் அதற்கு ஒரு கட்டணம் கட்ட வேண்டும் என்பது டிராய் (TRAI) வகுத்துள்ள பழைய விதி. இந்த கட்டணத்தை இதுவரையில் ஜியோ தானே ஏற்று வந்தது. இப்போது மக்களிடம் கேட்கிறது.

 அதுவும் எப்படி கேட்கிறது. உங்கள் ரீசார்ஜ் கட்டணத்தோடு 10 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் போதும். அந்தத் தொகையில் டிராய் வகுத்துள்ள இந்த கட்டணத்தை ஜியோ சரி செய்து கொள்ளும். இந்த 10 ரூபாய்க்கு 1 ஜிபி அதிவேக 4G இன்டர்நெட் டேட்டாவை இலவசமாகத் தருகிறது.

 

மேலும் டிராய் போட்டுள்ள அந்த கட்டணத்தை அவர்கள் நீக்கிய அடுத்த நொடி நாங்களும் நீக்கி விடுவோம் என்கிறது. இது நியாயமான கட்டணம் தான்.

 ஜியோ வருகைக்கு முன்னர், ஒரு மாதத்திற்கு 1 ஜிபி 3 G டேட்டாவிற்கு ஏர்டெல் 700 ரூபாய் வசூலித்தது. இதோடு அவுட்கோயிங் கால்களுக்கு தனிக் கட்டணம். இந்த நிலையை ஜியோ தலைகீழாகப் புரட்டிப் போட்டது.
 ஒரு மாதத்திற்கு 1 GB டேட்டா என்றிருந்த நிலைமையை ஒரு நாளைக்கு 1GB டேட்டா இலவசம் என்ற நிலையை ஜியோ கொண்டு வந்தது. ஜியோ அவுட்கோயிங் கால்கள் இலவசம் என்று அறிவித்த பின்னரே மற்ற நிறுவனங்களும் வேறு வழியின்றி அதே திட்டத்தை செயல்படுத்தின” எனத் தெரிவித்துள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close