[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது
  • BREAKING-NEWS வயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்
  • BREAKING-NEWS மேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை
  • BREAKING-NEWS சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கை
  • BREAKING-NEWS தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு
  • BREAKING-NEWS தமிழக முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது; அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்- டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS அடுத்த 2 நாட்களுக்கு திருவள்ளூர், வேலூர், தி.மலை, சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், திருச்சி உள்ளிட்ட இடங்களில் வெப்ப அலை வீச வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

இனி செல்போன் பேசிக்கிட்டே ஓட்டலாம் 'தானியங்கி ஸ்கூட்டர்'...!

self-driving-scooter-lunched-in-singapore

செல்போன் பேசிக்கொண்டே ஸ்கூட்டரை ஓட்டி சென்று பல இளைஞர்கள் விபத்தில் சிக்கிக் உயிரிழக்கின்றனர். இதனை தவிர்க்கும் வகையில், தானாக இயங்கக்கூடிய ஸ்கூட்டரை சிங்கப்பூர் ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர்.

தானியங்கி கார், ரோபோ கார் மற்றும் தானியங்கி பேருந்துகளுக்கான ஆராய்ச்சிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நேரத்தில் தற்போது தானியங்கி ஸ்கூட்டரை சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர். ஒரு நபர் மட்டுமே பயணிக்கக் கூடிய இந்த ஸ்கூட்டரில் நான்கு சக்கரம் உள்ளது. இதன் எடை 50 கிலோ ஆகும். அதிகபட்சமாக மணிக்கு 6 கி.மீட்டர் வேகத்தில் பயணிக்கும் இந்த ஸ்கூட்டர் பயணிக்கும் போது இடையூறுகள் வந்தால் அதனை கண்டறிவதற்காக இதில் உணர்விகள் பொருத்தப்பட்டுள்ளன.

தானியங்கி ஸ்கூட்டரில் அனைத்து வயதினரும் பயணம் செய்யலாம் எனவும் இந்த வாகனத்தால் கார்களுக்கான தேவை குறைவது மட்டுமின்றி விபத்துக்களின் எண்ணிக்கையும் குறையும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அதற்கேற்றவாறு அனைத்து சோதனைகளையும் வெற்றிகரமாக தாண்டி வெற்றி பாதையில் பயணிக்கிறது இந்த ஸ்கூட்டர். இந்த தானியங்கி ஸ்கூட்டர் சந்தைக்கு விரைவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close