[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் 5 வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS மக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து கொண்டோரை தமிழக அரசு துன்புறுத்துவது ஏன்?- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
  • BREAKING-NEWS வேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட உள்தமிழகத்தின் ஒருசில இடங்களில் அனல் காற்று வீசும்- சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை முடித்து வைத்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்
  • BREAKING-NEWS 10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து
  • BREAKING-NEWS காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது

“இரண்டாம் கட்ட தேர்தலுக்கு பின் எதிர்க்கட்சிகள் பயத்தில் உள்ளன” - பிரதமர் மோடி

lok-sabha-election-congress-has-no-vision-for-nation-said-pm-modi

மக்களவைக்கு இரண்டுகட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் பயந்துபோய் இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி இன்று காலை மேற்கு வங்க மாநிலம் தெற்கு தினாஜ்பூர் மாவட்டம் புனியாத்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று வாக்குச் சேகரித்தார். அப்போது மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தோல்வி பயத்தில் தூக்கமின்றி தவித்து வருவதாக தெரிவித்தார். 

மேலும், மேற்குவங்க மக்களின் வளர்ச்சிக்கு தடையாக மம்தா பானர்ஜி உள்ளதாவும் குற்றஞ்சாட்டினார். சிறுபான்மையின மக்களை திருப்திபடுத்துவதற்காக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர், அண்டை நாடுகளில் உள்ளவர்களை அழைத்து பிரச்சாரம் மேற்கொள்ள செய்வது அவமானத்திற்குரிய செயலாகும் என மோடி விமர்சித்தார். 

பால்கோட் பகுதியில் நமது தைரியமிக்க வீரர்கள் பயங்கரவாதிகளை அழித்ததற்கு ஆதாரங்களைக் கேட்கும் மம்தா பானர்ஜி, முதலில் சிட்ஃபண்ட் ஊழலில் தொடர்புடையவர்கள் குறித்த ஆதாரங்களை வெளியிடட்டும் எனக் கூறினார். 

இதைத்தொடர்ந்து பீகார் மாநிலத்திற்குச் சென்ற பிரதமர் மோடி, அராரியா மாவட்டத்தில் வாக்குச் சேகரித்தார். அங்கு பேசிய அவர், காங்கிரஸ் கட்சி தேசத்தின் மீது அக்கறைக் கொள்ளாமல், வாக்கு வங்கியை அதிகரிப்பதிலேயே குறியாக உள்ளதாக குற்றஞ்சாட்டினார். 

மேலும், வாக்குகளைப் பெறுவதற்கான பக்தி மற்றும் தேச நலனுக்கான பக்தி என நாட்டில் இரண்டு விதமான சூழல் நிலவுவதாகத் தெரிவித்துள்ள மோடி, மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு, அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டினார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close