[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாமக்கலில் முட்டை கொள்முதல் விலை 10 காசு குறைந்து ரூ.4.08ஆக நிர்ணயம்
  • BREAKING-NEWS 2013-2017 வரை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் நவ.24 முதல் 29ஆம் தேதி வரை மாவட்ட அமமுக அலுவலகங்களில் விருப்பமனு அளிக்கலாம் - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS கோவையில் இளம்பெண் விபத்தில் சிக்கிய இடத்தில் கொடிக்கம்பம் ஏதும் இல்லை - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்
  • BREAKING-NEWS எஸ்பிஜி பாதுகாப்பை விலக்கிக் கொள்ளும் மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • BREAKING-NEWS இந்தியாவிலேயே அதிக மருத்துவர்கள் கொண்ட மாநிலங்களில் தமிழகம் 2வது இடம்; மகாராஷ்டிரா முதல் இடம் - மத்திய அரசு
  • BREAKING-NEWS சிவசேனா, தேசியவாத காங்., காங்கிரஸ் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சியமைத்தாலும் நிலைக்காது - நிதின் கட்கரி

ராகுலின் ஆவேசமான ஆங்கில பிரச்சாரம்.. அழகு தமிழில் தாங்கிப் பிடித்த பீட்டர் அல்போன்ஸ் 

congress-leader-rahul-gandhi-election-speeches-and-its-translations-better-than-previous-in-tamilnadu

முந்தைய பரப்புரையில் இருந்த மொழிபெயர்ப்புச் சிக்கலை ராகுல் காந்தி சரியாக கையாண்டுவிட்டதாகவே பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதல் கட்ட வாக்குப் பதிவு முடிவடைந்துள்ள நிலையில், இன்னும் 6 கட்ட வாக்குப் பதிவு உள்ளது. பிரதமர் மோடி, அமித்ஷா, ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் நாடு முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அப்படி தேசிய தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொள்ளும் போது, பல மாநிலங்களில் மொழிபெயர்ப்பாளர்களின் அவசியம் ஏற்படுகிறது. 

சில நேரங்களில் தலைவர்கள் பேசுவதற்கும், அதனை மொழிபெயர்ப்பாளர்கள் சற்று வித்தியாசமாகவோ, மாற்றியோ மொழிபெயர்க்கும் போது நகைச்சுவையாக மாறிவிடுகிறது. அமித்ஷா பேசியதை கடந்த ஆண்டு ஹெச்.ராஜா மொழிபெயர்த்தது வைரல் ஆனது. அந்த வகையில் தமிழகத்தில் தொடர்ச்சியாக மொழிபெயர்ப்பு நகைச்சுவை கதைகள் அரங்கேறி வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பு ராகுல் காந்தியின் பேச்சை, கே.வி.தங்கபாலு மொழிபெயர்த்தது வைரல் ஆனது. 

                

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று ஒரே நாளில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரப்புரை மேற்கொண்டார். கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் செல்லக்குமார், ஒசூர் சட்டமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் சத்யா, தருமபுரி மக்களவைத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செந்தில்குமார், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் மணி, அரூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் கிருஷ்ணகுமார் ஆகியோரை ஆதரித்து ராகுல்காந்தி இன்று  பிரச்சாரம் மேற்கொண்டார். 

            

அப்போது, பேராசியர் ஒருவர் ராகுல் காந்தியின் உரையை மொழி பெயர்த்தார். ராகுலின் பேச்சை அவர் உன்னிப்பாக கவனிக்கும் விதமே விநோதமாக இருந்தது. ராகுல் நீண்ட நேரம் பேசுவதால் அதனை முழுமையாக உள்வாங்கி மொழிபெயர்ப்பது சிக்கலாக இருந்ததாக தெரிந்தது. இந்தப் பரப்புரைக்குப் பிறகு ராகுல் காந்தி சேலத்தில் பரப்புரை மேற்கொண்டார். ஸ்டாலின் பங்கேற்ற அந்தக் கூட்டத்தில் ராகுலின் பேச்சை டி.கே.எஸ்.இளங்கோவன் மொழிபெயர்த்தார். இந்த மொழிபெயர்ப்பு காலையிலிருந்ததை சிறப்பாக இருந்தது. அதனால், ராகுல் நீண்ட நேர பேச்சை குறைத்து பேசினார். அதனால், மொழிபெயர்ப்பு செய்ய அவருக்கு ஏதுவாக இருந்ததாக புரிந்து கொள்ள முடிந்தது. 

      

பின்னர், காங்கிரஸ் வேட்பாளர்கள் மாணிக்கம் தாகூர், திருநாவுக்கரசர், கார்த்தி சிதம்பரம் ஆகியோரை ஆதரித்து மதுரையில் பரப்புரை மேற்கொண்டார். அதேபோல், தேனியில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் பிரச்சாரம் செய்தார். இந்த இரண்டு கூட்டங்களிலும் பீட்டர் அல்போன்ஸ் மொழிபெயர்த்தார். பீட்டரின் மொழிபெயர்ப்பு கூடுதலாக சிறப்பாக இருந்தது. இதற்கு முக்கியமான காரணம், ராகுல் மிகவும் சுருக்கமாக நிறைய வார்த்தைகளை பேசினார். அதனால், உடனுக்குடன் அதனை பீட்டர் மொழிபெயர்த்தார். 

மேலும் பீட்டர் அல்போன்ஸிடம் ஆங்கில வார்த்தைகளை உடனடியாக தமிழுக்கு மாற்றும் சொல்வளம் மிகுந்து காணப்பட்டது. அவர் அனிச்சையாக வார்த்தைகளை தமிழாக்கினார். ஒவ்வொரு ஆங்கில சொல்லுக்கும் இணையான தமிழ் சொல்லை அவர் தேடி எடுக்கவில்லை என்பது அவரது கூடுதல் பலமாக இருந்தது. 

       

மொழிபெயர்ப்பில் இந்தத் தன்மை மிகவும் முக்கியமானதாக உள்ளது. பேசும் தலைவர்களுக்கும், மொழி பெயர்ப்பவர்களுக்கு இடையே சரியாக புரிதல் இருக்க வேண்டும். மொழிபெயர்ப்பவர்களுக்கு சரியான மொழிப் புலமை இருக்க வேண்டும். பேசும் தலைவர்களும் மொழிபெயர்ப்பாளர்களின் தன்மையை புரிந்து கொண்டு பேசினால் உரை கொஞ்சம் சுவாரஸ்யமாக இருக்கும்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close