அரசியலில் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனுக்கு நடிகர் ரஜினி வாழ்த்து தெரிவித்தார்.
நாடாளுமன்றத் தோ்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கு பல்வேறு கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வருகின்றன.
திமுக - காங்கிரஸ் கூட்டணியும் அதிமுக – பாஜக- பாமக கூட்டணியும் தற்போது வரை உறுதியாகியுள்ளது. அதிமுக- தேமுதிக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மேலும் திமுகவுடனும் பல்வேறு தோழமை கட்சிகள் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இதைத்தொடர்ந்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் 40 தொகுதியிலும் போட்டியிடுவோம் என தெரிவித்துள்ளார். இந்த தேர்தலில் ஒரு தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே ரஜினிகாந்த், தனக்கு ஆதரவு அளிப்பார் என நம்புகிறேன் என கமல்ஹாசன் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். இதனிடையே நடிகர் ரஜினிகாந்த் தனது மன்ற நிர்வாகிகளுக்கு எழுதிய கடிதத்தில் யார் தண்ணீர் பிரச்னையை தீர்ப்பார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களோ அவர்களுக்கு நீங்கள் வாக்களியுங்கள் எனவும் சட்டப்பேரவை தேர்தல் தான் நம் இலக்கு எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் 2-ஆவது ஆண்டு தொடக்கவிழா நெல்லையில் நடைபெற்றது. இதனால் ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், கட்சி ஆரம்பித்து, இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்து, தேர்தலில் முதல்முறையாக போட்டியிட போகும் மக்கள் நீதி மய்யம் தலைவர், என் நண்பர் கமல்ஹாசனுக்கு வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார். பொதுவாழ்விலும் அவர் வெற்றிபெற மனமார்ந்த நல்வாழ்த்துகள் என்று ரஜினிகாந்த் பதிவிட்டுள்ளார். இதற்கு கமல்ஹாசனும் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். நல்லவர் துணை நின்றால் நாற்பது எளிதே, நாளை நமதே என கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.
உன்னாவ் வன்கொடுமை: குல்தீப் சிங் செங்கார் மீதான தண்டனை விவரம் நாளை அறிவிப்பு
வெங்காய விலை உயர்வு: கோடீஸ்வரரான விவசாயி ?
மாணவர்கள் மீது தடியடி : தமிழகத்தில் வெடித்த மாணவர்கள் போராட்டம்...!
'இலங்கைத் தமிழர்களை ஏன் ஒதுக்கினீர்கள்' - ப.சிதம்பரம் கேள்வி
“வெளியே இருப்பவர்களுக்கு எப்படி தெரியும்” - ஜடேஜா ரன் அவுட் சர்ச்சை குறித்து கோலி கருத்து