[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

மோதலா? நெஞ்சுவலியா? - கர்நாடக காங்கிரஸில் என்னதான் நடக்கிறது?

karnataka-two-congress-mlas-get-into-a-fight-at-resort-one-ends-up-in-hospital

கர்நாடகாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த எம்எல்ஏ ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த ஆண்டு மே மாதம் கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் மே 15ம் தேதி வெளியானது. பாஜக 104 தொகுதிகள் தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ் 80 தொகுதிகள், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி 37 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. ஆட்சி அமைக்க 113 இடங்கள் தேவை.

        

தேர்தல் முடிவுகள் வெளியானது முதல் காங்கிரஸ் - மஜத இணைந்து ஆட்சி அமைத்தது வரை கர்நாடக அரசியல் அவ்வளவு பரபரப்பாக இருந்தது. இறுதியில் குமாரசாமியை முதலமைச்சர் ஆக்கி பாஜகவை ஆட்சிக்கு வரவிடாமல் காங்கிரஸ் தடுத்தது. அந்த நேரத்திலே தங்களது எம்.எல்.ஏக்களை பாதுகாக்கும் முயற்சி காங்கிரஸ்-மஜத தரப்பில் மேற்கொள்ளப்பட்டது. ஆட்சி அமைப்பதற்கான முயற்சியை பாஜக இறுதிவரை மேற்கொண்டது. 

           

காங்கிரஸ், மஜத இடையே நூறு சதவிகித புரிதலுடன் ஒற்றுமை ஏற்படவில்லை. இரண்டு தரப்பிற்குமே வேறு வழியில்லாததால் இந்த முடிவுக்கு வர நேர்ந்தது. காங்கிரஸ், மஜத இடையேயான இந்த ஒற்றுமையின்மை பல்வேறு கட்டங்களில் வெளிப்பட்டது. குறிப்பாக அமைச்சர் பொறுப்பு வழங்கும் நேரத்தில் பகிரங்கமாக வெளிப்பட்டது. இருப்பினும், ஆட்சியை தொடர்ந்து நடத்தவும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை கட்டுக்குளையாமல் வைத்துக் கொள்ளவும் காங்கிரஸ் மூத்த தலைவரும் அமைச்சருமான டி.கே.சிவக்குமார் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். 

எப்படி இருந்தாலும் காங்கிரஸ் - மஜத கூட்டணிக்கு பெரும்பான்மையை விட சற்றே கூடுதலான இடங்களே கைவசம் உள்ளன. அதேபோல் பாஜகவுக்கு சற்றே குறைவான இடங்களே தேவைப்படுகிறது. அதனால், கர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் நடைபெற்றுவரும் ஆட்சியை கலைப்பதற்கு எம்எல்ஏக்களிடம் பேரம் பேசப்படுவதாக காங்கிரஸ் - பாஜக கட்சிகள் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை கூறி வந்தன. 

           

இந்நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சிலர் பாஜகவுக்கு தாவ உள்ளதாகவும், அவர்களிடம் ரிசார்ட்டில் வைத்து பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கடந்த சில நாட்களாகவே செய்திகள் வெளியாகி வருகின்றன. பெங்களூருவில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலர் தங்கியுள்ளார்கள்.

இதனிடையே, சொகுசு விடுதியில் தங்கியிருக்கும் எம்.எல்.ஏக்கள் இடையே நேற்று கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த மோதலின் போது, ஆனந்த் சிங் என்ற எம்எல்ஏவை, கே.என்.கணேஷ் என்ற எம்எல்ஏ தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ஆனந்த் சிங் தற்போது பெங்களூரு அப்போலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

அதே‌வேளை நெஞ்சுவலி காரணமாக ஆனந்த் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் டி.கே.சுரேஷ் தெரிவித்துள்ளார். ஊடகங்களில் தவறான செய்திகள் வெளியாகி வருவதாகவும், எம்.எல்.ஏக்கள் ஒற்றுமையுடன் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 

     

இதுதொடர்பாக ஏஎன்ஐக்கு அவர் அளித்த பேட்டியில், “சண்டை குறித்து எதுவும் தெரியாது. ஆனந்த் சிங் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் சேர்ந்தார். அவருக்கு எந்த காயமும் இல்லை. அவரது பெற்றோர்கள் மருத்துவமனையில் உள்ளனர். மற்றபடி வெளியாகும் செய்திகள் அனைத்து யூகங்களே” என்றார்.

அமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறுகையில், “எவ்வித சண்டையும், தாக்குதலும் நடைபெறவில்லை. மதுபான பாட்டில்கள் எதுவும் இல்லை. இரண்டு எம்.எல்.ஏக்களும் விரைவில் ஊடகங்களிடம் பேசுவார்கள்” என்றார்.  

          

அப்பல்லோ மருத்துவர்களிடம் விசாரித்தால் ஆ‌னந்த் சிங் எதற்கு சிகிச்சை பெற்று வருகிறார் என்று தெரிந்துவிடும் என்றும் எம்எல்ஏக்கள் மோதல் குறித்து காவல்துறையினர் விசாரிக்க வேண்டும் என்றும் பாரதிய ஜனதா எம்எல்ஏ ஆர்.அஷோக் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close