[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தியை பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதி நாளை சந்திக்கவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மீண்டும் ஆலோசனை
  • BREAKING-NEWS கேதார்நாத்தில் வழிபட்டதை நான் அதிர்ஷ்டமாக நினைக்கிறேன்; எனக்கும் கேதார்நாத்துக்கும் ஒரு உணர்வுப்பூர்வமான உறவு உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS சூலூர்: கருமத்தம்பட்டியில் வேறு வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டுவரப்பட்டு தாமதமாக வாக்குப்பதிவு தொடக்கம்; வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறினால் வாக்குப்பதிவு தொடங்காமல் இருந்தது
  • BREAKING-NEWS 7ம் கட்ட மக்களவை தேர்தல் - பீகார் முதல்வர் நிதீஷ் குமார் பாட்னாவில் வாக்களித்தார்
  • BREAKING-NEWS இறுதிக்கட்ட மக்களவை தேர்தலில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூரில் வாக்களித்தார்
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த 7 ஆம் கட்ட வாக்குப்பதிவு 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் நடைபெறுகிறது

14 வயதில் தொடங்கிய அரசியல் பயணம் - மு.க.ஸ்டாலின் கடந்து வந்த பாதை

mk-stalin-political-history

14 வயதில் தொடங்கிய அரசியல் பயணம் - மு.க.ஸ்டாலின் கடந்து வந்த பாதை

திமுக தலை‌வராக போட்டியின்‌றி தேர்வாகும் மு.க.ஸ்டாலி‌னின் அரசியல் வாழ்க்கை 1967ஆம் ஆண்டு, ‌‌அவரது பதினான்காவது வயதிலேயே தொடங்கி விட்டது. ‌ஏறத்தாழ அரைநூற்றாண்டு கால அரசியல் அனுபவத்தைப் ஸ்டாலின் பெற்றிருக்கிறார். 

கருணாநிதி - தயாளு அம்மாளின் மூன்றாவது மகனாக 1953ஆம் ஆண்டு மார்ச் ஒன்றாம் தேதி பிறந்தார் ஸ்டாலின். திமுக முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தபோது அதாவது 1967ஆம் ஆண்டு தனது 14ஆவது வயதிலேயே அவர் அரசியலில் கால் பதித்தார். 1973ஆம் ஆண்டு திமுகவின் பொதுக்குழு உறுப்பினரானார். பிறகு 1975ல் அவசர நிலை அமல்படுத்தப்பட்ட போது சிறையில் அடைக்கப்பட்டார். திமுகவின் இளைஞர் அணிச் செயலாளர் பொறு‌ப்பை கவனித்து வந்த அவர், முதன்முறையாக 1984 ஆம் ஆண்டு தேர்தலில் ஆயிரம் விளக்குத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். பின் 19‌89ஆம் ஆண்டு தேர்தலில் அதே தொகுதியில் முதன்முறையாக வெற்றி கண்டு சட்டப்பேரவைக்குள் நுழைந்தார். இருப்பினும், ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பின்னர், 1991ல் திமுக ஆட்சி கலைக்கப்பட்டு நடைபெற்ற தேர்தலில் அவர் தோல்வியைத் தழுவினார். 

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பிந்தைய அதா‌வது 1996 தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் அவர் இரண்டாவது முறையாக வெற்றியை வசப்படுத்தினார். அதன்பிறகு உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சிக்கு நேரடி மேயராக‌வும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் சென்னை மாநகராட்சிக்கு நேரடியாக தேர்வான முதல் மேயர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்தது. 2001 தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் வென்று மூன்றாவது முறையாக சட்டப்பேரவைக்குத் தேர்வானார். அதே ஆ‌ண்டு மீண்டும் சென்னை மேயராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், 2002ஆம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசு கொண்டுவந்த சட்டத்தால் அவர் மேயர் பதவியலிருந்து விலக நேரிட்டது. இருப்பினும், எம்எல்ஏவாகத் தொடர்ந்தார். 

2006 பேரவைத் தேர்தலில் 4ஆவது முறையாக ஆயிரம் விளக்குத் தொகுதியில் வெற்றியை வசப்படுத்தினார். ‌ அப்போது உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் பதவி வகித்த அவர், 2008ஆம் ஆண்டு திமுக பொருளாளராக ‌பொறுப்பேற்றார். பின்னர் 2009ஆம் ஆண்டு துணை முதலமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். பின்னர் 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டுக‌ளில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலிருந்து எம்எ‌ல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார்.

கருணா‌நி‌தியின் உடல் நலம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து 2017ஆ‌ம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி ஸ்டாலின் திமுக ‌செயல் தலைவராக நியமிக்கப்பட்டார். கரு‌ணாநிதியின் மறைவை தொடர்ந்து திமுக ‌தலைவர் பதவி‌க்கு மனுத்தாக்கல் செய்துள்ள மு.க.ஸ்டாலின், போட்டியின்றி அக்கட்சியின் ‌தலைவராகிறார்.

நீண்டகாலமாக கட்சிப்பணியாற்றி வரும் ஸ்டாலினுக்கு புதிய பதவி கிடைத்தால் அது அவரின் உழைப்பிற்கு கிடைத்தாக அமைவும் என்கிறார்கள் பத்திரக்கையாளர்கள்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close