[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு
  • BREAKING-NEWS தனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS ஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்

25 ஆண்டுகளாக இருக்கும் பொக்கிஷத்தை பயன்படுத்தாமல் இருக்கிறோம்: கமல் வேதனை

makkal-needhi-maiam-gram-panchayat

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடப் போவதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் சார்பாக மாதிரி ‘கிராம சபைக் கூட்டம்’ நடைபெற்றது. அதில் கிராம சபையின் அவசியம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் வலிமை உள்ளிட்டவை குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பேசினார். கிராமத்தின் வளர்ச்சியே தேசத்தின் வளர்ச்சி என்று குறிப்பிட்ட கமல்ஹாசன், கிராம சபை கூட்டம் நடத்தப்படும் போது வெளிப்படைத் தன்மை இருக்கும், ஊழல் குறையும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

கிராமப் பஞ்சாயத்துகளுக்கான நிதியை முறையாக பயன்படுத்தி இருந்தால் தமிழகத்தின் முகமே மாறியிருக்கும் என்று குறிப்பிட்ட கமல்ஹாசன், கிராம சபை கூட்டங்கள் மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும் என்றார். 25 ஆண்டுகளாக கையில் இருக்கும் ஒரு பொக்கிஷத்தை பயன்படுத்தாமல் இருப்பதாக கவலை தெரிவித்த கமல், வரும் உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடப் போவதாகவும், அதற்கான நடவடிக்கையில் தான் ஈடுபட்டு வருவதாகவும் கூறினார். மேலும் பத்திரிகையாளர்களை தரக்குறைவாக விமர்சித்த பாரதிய ஜனதாவைச் சேர்ந்த எஸ்.வி.சேகருக்கு தன் கண்டனத்தையும் பதிவு செய்தார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:

[X] Close