[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்தது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS விநாயகர் சிலை ஊர்வலத்தில் பேசியதை நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க ஹெச்.ராஜா எதிர்ப்பு
  • BREAKING-NEWS தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
  • BREAKING-NEWS உலகின் சிறந்த கால்பந்து வீரராக லூகா மோட்ரிச் தேர்வு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.36 காசுகளாகவும் விலை நிர்யம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம்
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி

கமல்ஹாசனின் கருத்து சரியல்ல: இல.கணேசன் விமர்சனம்

lg-ganesan-about-kamalhasan

நில வேம்பு குறித்து நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்தை பாஜக மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன் விமர்சித்துள்ளார்.

சரியான ஆராய்ச்சி முடிவுகள் வரும் வரை நிலவேம்புக் கசாயத்தை விநியோகிக்க வேண்டாம் என தனது ரசிகர்களுக்கு கமல்ஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கு அரசியல் தலைவர்களும் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய இல.கணேசன், “அதிகமான அளவில் மக்களுக்கு நிலவேம்பு கசாயத்தை தர வேண்டும் என்பதற்காக தனியார் நிறுவனங்களும், தொண்டு நிறுவனங்களும், பாஜகவும் பல இடங்களிலும் முயற்சி செய்து வருகிறது. இவ்வாறு இருக்கும் போது நடிகர் கமல் வித்தியாசமாக ஏன் குரல் கொடுக்கிறார் என்பது தெரியவில்லை. இதனால் கமல் டெங்குக்கு ஆதரவாளர், டெங்குக் கொசுவிற்கு ஆதரவாளர் என்று முத்திரை குத்த முடியாது. இருப்பினும் கமல் கூறியது சரியான கருத்தல்ல. எல்லா விஷயத்திலும் வித்தியாசமாக பேசினால் புகழ் கிடைக்கும் என்று பேசுபவர்கள் போல கமல்ஹாசன் நடந்துகொள்வார் என நான் நினைக்கவில்லை. ஏன் இப்படி பேசினார் என அவரை தான் கேட்க வேண்டும்.” என்று கூறினார்.
 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close