[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லியில் 28 ஆவது ஜிஎஸ்டி கூட்டம் அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் தொடங்கியது
  • BREAKING-NEWS இந்தியா திருக்கோயில் என்றால், கடவுள் இருக்கும் இடம் தமிழ்நாடு- முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நிதி மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேற்றப்படும்- புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் அருகே முயல் தீவுப் பகுதியில் ரூ.4 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல்
  • BREAKING-NEWS நாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் 2 ஆவது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS விருதுநகர்: ராஜபாளையம் அருகே திருவள்ளூர் நகரில் பாலியல் புகாரில் பள்ளி தலைமை ஆசிரியர் கைது

காவல்துறையை மீட்க மாநில பாதுகாப்பு ஆணையம் அவசியம்: ஸ்டாலின்

appoint-state-security-commission-mkstalin

தமிழக காவல்துறையை மீட்க உடனடியாக 'மாநில பாதுகாப்பு ஆணையத்தை' அமைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தில் தற்போது, எதிர்க்கட்சிகள் மீது பொய் வழக்குகள் போடவும், பொதுமக்கள் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடவும் காவல்துறை பயன்படுத்தப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யே உளவுத்துறைக்கும் பொறுப்பு டி.ஜி.பி.யாக இருப்பதால், அரசியல் பணிகளை மட்டுமே செய்யும் நிலைக்கு உளவுத்துறை தள்ளப்பட்டுள்ளதாக ஸ்டாலின் கூறியுள்ளார். 
எனவே தமிழ்நாடு காவல்துறை சீர்திருத்தச் சட்டம் 2013ன் கீழ் அமைக்கப்பட வேண்டிய ' மாநில பாதுகாப்பு ஆணையம்' தற்போது மிகவும் அவசியமாகிறது என அவர் தெரிவித்துள்ளார். காவல்துறைக்கான அமைச்சர், எதிர்க்கட்சி தலைவர், அரசு பணியாளர் தேர்வாணையம், மாநில மனித உரிமைகள் ஆணையம், தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர் ஆகியோரை இந்த ஆணையம் உறுப்பினர்களாகக் கொண்டிருப்பதால், தமிழக காவல்துறை சீரமைப்புக்கான வழிகாட்டுதல்களை உருவாக்கிட முடியும் என தாம் நம்புவதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார். எனவே உச்சநீதிமன்ற தீர்ப்பு அடிப்படையிலான 'மாநில பாதுகாப்பு ஆணையத்தை' உருவாக்க தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close