[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புதிய 100 ரூபாய் நோட்டின் மாதிரியை வெளியிட்டது ஆர்பிஐ
  • BREAKING-NEWS பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது- முதலமைச்சர்
  • BREAKING-NEWS டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்தார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தார்மீக அடிப்படையில் திமுக முழு ஆதரவு- ஸ்டாலின்
  • BREAKING-NEWS கோவை: ஆழியார் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்ட உள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS சத்தீஸ்கர்: தான்டேவாடா- பிஜாப்பூர் எல்லைப்பகுதியில் நடந்த என்கவுன்டரில் 7 மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 18,19 ஆம் தேதி டெல்லியில் நடக்கிறது

சசிகலாவே பொதுச்செயலாளர்- பிரமாண பத்திரத்தை வெளியிட்ட டிடிவி அணியினர்

sasikala-is-general-secretary-says-by-aiadmk-law-certificate

டிடிவி தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் ஆர்.பி உதயகுமார், ஜெயக்குமார் பேசிய நிலையில் அவர்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தை டிடிவி தினகரன் அணி வெளியிட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி தேர்தல் ஆணையத்தில் ஆர்.பி உதயகுமார் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் கட்சியை வழிநடத்த வி.கே.சசிகலாவை அதிமுகவின் பொதுச்செயலாளராக தாம் உட்பட கட்சியின் பெரும்பான்மையானவர்கள் தேர்ந்தெடுத்ததாக தெரிவித்துள்ளார். அதேபோல் சசிகலாவின் தலைமையை அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரிப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதையும், டிடிவி தினகரன் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டதை அவர்கள் ஆதரிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட பின்னரே டிடிவி தினகரன் கட்சியிலிருந்து ஒதுங்கியிருப்பதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தையும் டிடிவி தினகரன் அணியினர் வெளியிட்டுள்ளனர்.


 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close