இளம் பெண்ணை கொலை செய்துவிட்டு, தானும் விஷம் அருந்திய நிலையில் காவல் நிலையத்தில் இளைஞர் ஒருவர் சரண் அடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தை அடுத்த கெராகர் பகுதி காவல் நிலையத்திற்கு நேற்று இளைஞர் ஒருவர் வந்துள்ளார். அவர், 19 வயதுடைய இளம் பெண்ணை தான் கொன்றுவிட்டதாகவும், தானும் விஷம் அருந்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவிக்குமார் கூறுகையில், “விஷம் அருந்திய அந்த இளைஞரின் பெயர் ஹெட் சிங் தோமர்(22). உடனடியாக அவர் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் அங்கிருந்து ஆக்ராவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். இருப்பினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அந்த இளைஞர் கூறிய பெண்ணின் உடல் கடந்த சனிக்கிழமை கட்டிடம் ஒன்றில் இருந்து கண்டறியப்பட்டது. அவரது கழுத்தில் கூர்மையான ஆயுதத்தால் அறுக்கப்பட்டுள்ளது. அப்போது முதல் தோமரை நாங்கள் தேடி வந்தோம்.
அந்த பெண் சனிக்கிழமை காலை காணாமல் போனார். பின்னர், அந்த பெண்ணின் சடலம் கிடைத்ததை அடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அவரது மொபைல் போன் பதிவுகளை வைத்து தோமர் தான் முதன்மை குற்றவாளி என சந்தேகம் எழுந்தது. தோமரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தோமரின் சகோதரியை அந்த பெண்ணின் கிராமத்தில் திருமணம் செய்து கொடுத்துள்ளார். அந்தவகையில் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. தோமர் அந்த பெண்ணுடன் காதல் வசப்பட்டதாக தெரிகிறது. இருப்பினும், அந்த பெண்ணின் வாழ்க்கையில் மற்றொரு ஆண் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, யாரும் இல்லாத பகுதிக்கு அந்த பெண்ணை வரவழைத்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்தை அறுத்துள்ளார். பின்னர் கத்தியை அருகில் உள்ள குளத்தில் வீசியுள்ளார்” என தெரிவித்தார்.
அசாம் மக்கள் ஏன் இப்படி கொந்தளிக்கிறார்கள்? - வரலாற்று காரணம் இதுதான்..!
‘சென்னை ஹோட்டல் ஊழியரை கண்டுபிடிக்க உதவுங்கள்’- தமிழில் வேண்டுகோள் விடுத்த சச்சின்
பாலியல் குற்றங்களுக்கு சினிமாவில் பெண்களை சித்தரிக்கும் விதமும் காரணமே - கனிமொழி
டி20 உலகக் கோப்பையில் தோனி களமிறங்குவார் - பிராவோ நம்பிக்கை
“கலப்பட டீ தூள், காலாவதியான குளிர்பானங்கள்” - திடீர் சோதனையில் சிக்கிய உணவுப் பொருட்கள்