[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இரண்டாவது டி20 போட்டியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது
  • BREAKING-NEWS தமிழகத்தில் வெங்காய விளைச்சல் நன்றாக உள்ளதால் 20 நாட்களில் விலை குறையும் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை நாட திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் 4 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க அனுமதி கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ரஜினி ஆதரவில்லை- ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை
  • BREAKING-NEWS கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

காதலனுடன் செல்ல எதிர்ப்பு - பெற்ற மகளை கொலை செய்த தாய்

upset-over-her-relationship-mumbai-woman-strangles-daughter-23-cops

மகளின் காதலை ஏற்றுக் கொள்ள முடியாத தாய், தனது மகளை கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்தவர் வாகேலா(40). இவரது மகள் நிர்மலா அசோக் வாகேலா (23). நிர்மலாவிற்கு ஒரு ஆண் நண்பருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இந்தக் காதலுக்கு தாய் வாகேலா மறுப்பு தெரிவித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நிர்மலா தனது காதலுடன் செல்ல முடிவு எடுத்தப் போது, தாய் வாகேலாவிற்கு எப்படியோ தெரிந்துள்ளது. அதனால், ஆத்திரமடைந்த அவர் தன்னுடைய மகளையே கொலை செய்ததாக கூறப்படுகிறது. 

இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர், “வாகேலா என்றவரின் மகள் நிர்மலாவிற்கும் ஒரு ஆணிற்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இவர்களின் காதலுக்கும் வாகேலா மறுப்பு தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தனது காதலுடன் செல்ல நிர்மலா திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் கடந்த ஞாயிற்றுகிழமை இரவு தனது வீட்டில் துணிகளை பையில் அடுக்கி வைத்திருக்கிறார். அப்போது நிர்மலாவிற்கும் தாய் வாகேலாவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

அந்த சமயத்தில் தாய் வாகேலா, நிர்மலா அணிந்து இருந்த துப்பட்டாவை வைத்து அவரது கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். இந்தச் சம்பவத்திற்கு தாய் வாகேலா தானகவே காவல்நிலையம் வந்து தனது செயலை ஒப்புக் கொண்டுள்ளார்” எனத் தெரிவித்தனர். 

இந்தச் சம்பவம் தொடர்பாக ஐபிசி பிரிவு 302-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  தாய் வாகேலா கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன், கொலை செய்யப்பட்ட நிர்மலாவின் சகோதரர் ஆகாஷ் வகேலாவும் கைது செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட தருணத்தில் ஆகாஷ் சம்பவ இடத்தில் இருந்ததாகவும், கொலை செய்ய தாய்க்கு உதவியதாகவும் கூறப்படுகிறது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close