[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

குஜராத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து - 21 பேர் உயிரிழப்பு

21-killed-as-bus-falls-into-gorge-in-gujarat-pm-modi-and-amit-shah-offer-condolences

குஜராத் மாநிலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

குஜராத்தின் பனாஸ்கந்தா மாவட்டத்தின் அம்பாஜி பகுதிக்கு அருகில் உள்ள பள்ளத்தாக்கு ஒன்றில் இந்த விபத்து ஏற்பட்டது. சுமார் 50 பேருக்கும் மேல் பயணம் செய்த அந்தப் பேருந்து நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்தது. இந்த விபத்தில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதில், 4 குழந்தைகள், 3 பெண்களும் அடங்குவர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்துக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பனஸ்காந்தா பேருந்து விபத்து சம்பவம் என்னை மிகுந்த கவலைக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என மோடி ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close