[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்தல் விதிகளை மீறியதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS இடைத்தேர்தல் தேர்தலில் நாங்குநேரி - 66.10%, விக்கிரவாண்டி - 84.36% வாக்குப்பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - ஆட்சியர்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாள் அக்.28ஆம் தேதி (திங்கள் கிழமை) அரசு விடுமுறை

இன்றைய முக்கியச் செய்திகள்!  

headlines-of-the-day

சென்னையில் பேனர் விழுந்து விபத்தில் சிக்கி உயிரிழந்த இளம்பெண் சுபஸ்ரீயின் உடல் கண்ணீர் அஞ்சலிக்குப் பிறகு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது

சாலைக்கு வண்ணம் பூச இன்னும் எத்தனை லிட்டர் ரத்தம் தேவை என உயர் நீதிமன்ற நீதிபதிகள் காட்டம். பேனர் விழுந்து இளம்பெண் உயிரிழந்த சம்பவத்தில் அலட்சியம் காட்டிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

கட்சியினர் யாரும் பேனர்கள் வைக்க வேண்டாம் என ஓ.பி.எஸ். -இ.பி.எஸ். அறிவுறுத்தல். திமுகவினர் பேனர் வைத்தால் நிகழ்ச்சியில் பங்கேற்கப் போவதில்லை என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் எல்லைகள் என்ன? முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டத்தில் ஆலோசனை

நடப்பு கல்வியாண்டில் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவிப்பு.10ஆம் வகுப்பு மொழித்தாள்களுக்கு இனி ஒரே தேர்வு நடத்தவும் முடிவு

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கனிமவளத்துறை அறைகளில் லஞ்ச ஒழிப்பு சோதனை. கதவை உள்புறம் தாழிட்டு விடிய விடிய தொடரும் ஆய்வு

சென்னை ஏழுகிணறு பகுதியின் நகைப்பட்டறையில் சுமார் ஒன்றரை கிலோ தங்கம் கொள்ளை. 45 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கத்தைத் திருடிய ஊழியர்களைத் தேடுகிறது காவல்துறை

சிதம்பரம் நடராஜர் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் தடபுடலாக திருமணம் நடந்த சர்ச்சை. விதிகளை மீறி அனுமதித்ததாக தீட்சிதர் பணியிடை நீக்கம்

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் பேச்சையே உலக நாடுகள் நம்புகின்றன. பாகிஸ்தான் உள்துறை அமைச்சரின் பேச்சால் பிரதமர் இம்ரான்கானுக்கு பின்னடைவு

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close