[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்திய அணி
  • BREAKING-NEWS வரும் 17-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் 25-ஆம் தேதி வெளியீடு: நவம்பர் 18-ஆம் தேதி வரை திருத்தங்கள் செய்யலாம்
  • BREAKING-NEWS ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு

இன்றைய முக்கியச் செய்திகள்!  

headlines-of-the-day

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர் நீதிமன்றம். வழக்கின் பிரதான நபர் என்பதால் முன் ஜாமீன் தர இயலாது என்று விளக்கம்

முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்ததை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மேல் முறையீடு. மனுவை இன்றே விசாரிக்க வேண்டும் என ப.சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர்கள் கோரிக்கை

ப.சிதம்பரம் வீட்டில் அவர் இல்லாததால் அங்கு சென்ற சிபிஐ அதிகாரிகள் ஏமாற்றம். 2 மணி நேரத்திற்குள் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் ஒட்டிவிட்டு திரும்பிய அதிகாரிகள்

ஏரிகளை இமைகளாக இருந்து மக்கள் காப்பாற்ற வேண்டும். சிறப்பு குறைதீர்வு கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தல்

தமிழகம், புதுச்சேரியில் இன்றும் மழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவிப்பு. சென்னை மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளில் அதிகாலையில் மிதமான மழை

கடலூர் அருகே சிதம்பரத்தில் ரவுடி மீது நாட்டு வெடிகுண்டு வீசி கத்தியாலும் குத்தி படுகொலை செய்த கும்பல். கொடூர செயலில் ஈடுபட்டவர்களை 4 தனிப்படை அமைத்து காவல் துறை வலைவீச்சு

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா - பாகிஸ்தான் இடையே சமரசம் செய்து வைக்க தயார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் அறிவிப்பு. காஷ்மீர் விவகாரம் குறித்து மோடியிடம் நேரில் பேச உள்ளதாகவும் தகவல்

ரியோ பராலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்ற தீபா மாலிக் உள்ளிட்ட இருவருக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு. ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட 17 பேர் அர்ஜூனா விருதுக்கு தேர்வு.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close