[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தின் 3 இடங்கள் உட்பட நாட்டின் 32 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு ஒப்பந்தம்
  • BREAKING-NEWS கொடைக்கானலில் ரூ.20 கோடியில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும் அரசு போக்குவரத்துக் கழகங்களில் சோதனை முறையில் பொது இயக்கப்பயண அட்டை அறிமுகப்படுத்தப்படும் - போக்குவரத்துத்துறையில் புதிய அறிவிப்புகளை பேரவையில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வெளியிட்டார்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு

“முதல்வர் பதவியில் நீடிக்க விரும்பவில்லை” - மம்தா பானர்ஜி

i-don-t-want-to-continue-as-the-chief-minister-says-mamata-banerjee

முதல்வர் பதவியில் நீடிக்க விரும்பவில்லை என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் திரிணாமூல் கங்கிரஸ் 22 இடங்களிலும், பாஜக 18 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. மேற்கு வங்கத்தில் பாஜக மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. 2 எம்.பிக்களை மட்டுமே வைத்திருந்த அந்தக் கட்சி தற்போது 18 எம்.பிக்களை கைப்பற்றி விட்டது. அதனைவிட திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு சமமாக வாக்கு சதவீதத்தையும் பிடித்துவிட்டது. இது, திரிணாமூல் கட்சிக்கு மிகப்பெரிய தோல்வியாகவே பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, “முதல்வராக தொடர விரும்பவில்லை என்று கட்சி நிர்வாகிகளிடம் தெளிவாக கூறினேன். ஆனால், அவர்கள் என்னை ராஜினாமா செய்ய விடவில்லை. கட்சி எனக்கு மிகவும் நெருக்கமானது. மிகச்சிறிய இடத்தில் இருந்து கட்சியை கட்டமைத்தேன். பதவி என்பது எனக்கு முக்கியமில்லை. 

மத்திய பாதுகாப்பு படைகள் எங்களுக்கு எதிராக பணியாற்றியது. எமர்ஜென்ஸி போன்ற நிலை உருவாக்கப்பட்டது. இந்து - முஸ்லிம் பிரிவினை உருவாக்கப்பட்டு வாக்குகள் பிரிக்கப்பட்டன. தேர்தல் ஆணையத்திடம் நாங்கள் புகார் அளித்தோம். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்றார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close