[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது
  • BREAKING-NEWS வயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்
  • BREAKING-NEWS மேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை
  • BREAKING-NEWS சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கை
  • BREAKING-NEWS தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு
  • BREAKING-NEWS தமிழக முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது; அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்- டிடிவி தினகரன்

"உங்கள் கர்மா உங்களுக்காக காத்திருக்கிறது" - பிரதமர் மோடிக்கு பதிலளித்த ராகுல்காந்தி

rahul-gandhi-tells-modi-that-his-karma-awaits-him

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து பிரதமர் மோடி கூறிய கருத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.

உத்தரபிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி "எனது மதிப்பை குறைப்பதற்காகவே ராகுல் காந்தி ரஃபேல் விவகாரத்தில் என்னை ஆதாரமின்றி குற்றஞ்சாட்டி வருகிறார். ஆனால் உங்கள் தந்தை, ராஜீவ் காந்தி நேர்மையானவர் என்று கூறுவார்கள். ஆனால் அவர் ஊழலில் நம்பர் ஒன்னாக மாறினார்" என்று கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்து பேசினார். மேலும் தொடர்ந்த மோடி " எனது செல்வாக்கை சிதைத்து, என்னை சிறுமைப்படுத்த நினைப்பவர்கள், நாட்டில் நிலையற்ற, பலவீனமாக அரசு அமைய வேண்டும் என விரும்புகிறார்கள். என தெரிவித்தார்.

பிரதமர் மோடியின் பேச்சுக்கு பதிலளித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி,போர் முடிந்துவிட்டது. உங்களது கர்மா உங்களுக்காக காத்திருக்கிறது. என் தந்தையைப் பற்றிய உங்கள் உள்நம்பிக்கைகளை பரப்புவது எந்த விதத்திலும் உங்களை பாதுகாக்காது என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து பிரதமர் மோடி கூறிய குற்றச்சாட்டுகளுக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பதில் அளித்து ட்வீட் செய்திருந்தார். அதில் மோடி எதையும் படிப்பதில்லை என நினைக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close