[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு
  • BREAKING-NEWS கருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி
  • BREAKING-NEWS தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS டெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.88 காசுகளாகவும் விலை நிர்ணயம்

பாஜகவில் இணைந்தார் கவுதம் காம்பீர் : அரசியல் இன்னிங்ஸ் ஆரம்பம்

cricketer-gautam-gambhir-joined-in-bjp-union-minister-arun-jaitley-welcome-him

முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் இன்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக நீண்ட காலம் விளையாடினார். கடந்த ஆண்டு டெல்லி மற்றும் ஐதராபாத் இடையே நடந்த ராஞ்சி தொடர் போட்டியோடு அனைத்து தரப்பு கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில் கவுதம் தனது அரசியல் நிலைப்பாட்டை இன்று டெல்லியில் அறிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்று அரசியல் இணைவு விழாவில், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் நெடுஞ்சாலை, போக்குவரத்து மற்று கப்பல்துறை அமைச்சர் நிதின் கட்காரி முன்னிலை கவுதம் பாஜகவில் இணைந்தார். கவுதம் காம்பீருக்கு பாஜக துண்டை தோளில் போட்டு இரு அமைச்சர்களும் வரவேற்றனர். இதைத்தொடர்ந்து அவருக்கு புது டெல்லி நாடாளுமன்றத் தொகுதியை பாஜக ஒதுக்கவுள்ளதாகவும், அங்கு கவுதம் போட்டியிடுவார் என்றும் கூறப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close