[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு
  • BREAKING-NEWS கருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி
  • BREAKING-NEWS தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS டெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.

கார்கில் கிங்... இதுதான் ’மிராக்கிள்’ மிராஜ் 2000-ன் சிறப்பு!

this-is-miracle-mirage-2000-jets

பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பயங்கரவாதிகள் முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் களமிறங்கிய மிராஜ் 2000 ரக போர் விமானம், கார்கில் யுத்தத்தில் முக்கிய பங்காற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. 

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ஆம் தேதி சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர். இதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

இதையடுத்து பாகிஸ்தானுக்கு வழங்கிய வர்த்தக ரீதியிலான அனுகூலமான நாடு என்ற அந்தஸ்தை இந்தியா திரும்ப பெற்றது. காஷ்மீர் தாக்குதலால் தன் நெஞ்சில் தீ எரிந்துகொண்டு இருப்பதாகவும், தாக்குதலுக்கு எதிரிகள் நிச்சயம் பெரிய விலை கொடுக்க வேண்டுமென்றும் பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதைத்தொடர்ந்து புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இந்திய ராணுவம் ஈடுபட்டுள்ளது. பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பயங்கரவாதிகள் முகாம் மீது 1000 கிலோ அளவிலான குண்டுகளை இந்திய விமானப்படை இன்று வீசியுள்ளது. இந்திய விமானப் படையின் மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் மூலம், இன்று அதிகாலை 3.30 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் பயங்கரவாதிகளின் முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட் டுள்ளது. இந்திய விமானப்படை ஏறக்குறைய 21 நிமிடங்கள் தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தது என தகவல் வெளியாகியுள்ளது.

மிராஜ் 2000-ன் சிறப்புகள்

இந்தத் தாக்குதலில் ஈடுபட்டுள்ள மிராஜ் 2000 ரக போர் விமானத்துக்குப் பல சிறப்புகள் இருக்கிறது. ரஃபேல் விமானத்தை உருவாக்கும் Dassault -ன் தயாரிப்புதான், இந்த விமானமும். மிராஜ் என்றால் தமிழில் கானல்நீர். அதாவது பொய்த் தோற்றம். இருக்கிற மாதிரி இருக்கும். பக்கத்தில் சென்றால் மாயமாகிவிடும் என்பது மிராஜ் ஸ்பெஷல்.

இதன் இன்னொரு சிறப்பு, துல்லிய கேமரா. மிக உயரத்தில் இருந்து லேசர் நுட்பத்தில் குண்டு போடும் ஆச்சரியம், இந்த விமானத்தின் சிறப்புக ளில் ஒன்று.

1986 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய விமானப்படைக்கு இந்த விமானம் வந்ததற்கு காரணம் பாகிஸ்தான்! ஆமாம், அந்த நாடு அமெரிக்காவிடம் இருந்து F16 ரக போர் விமானங்களை வாங்கியதும், அதைவிட சக்தி வாய்ந்த மிராஜ் 2000 ரக போர் விமானங்களை பிரான்சிடம் இருந்து இறக்கு மதி செய்தது, இந்தியா!

கார்கில் வெற்றியின் கிங் இந்த விமானம். அந்த போரில் பாகிஸ்தான் படைகளையும் பயங்கரவாதிகளையும் துவம்சம் செய்ததில் இந்த விமா னத்துக்குப் பெரும் பங்கு உண்டு.

மிகவும் பாதுகாப்பான இந்த விமானத்தில், விபத்துகள் குறைவுதான் என்றாலும் 1989 ஆம் வருடம் நடந்த அந்த விபத்து, எதிர்பாராத ஒன்று. இந்திய விமானப்படை நாளான அக்டோபர் 8 அன்று டெல்லியில் நடந்த சாகச நிகழ்ச்சியில் விபத்தில் சிக்கியது, இந்த மிராஜ்!

அந்த விபத்தில் விங்க் கமாண்டர் பக்‌ஷி, விமானம் மக்களை நோக்கி செல்வதைக் கண்டும் அருகில் இருந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் கிட்டங்கியில் விழுந்து விடக் கூடாது என்றும் காலி மைதானம் நோக்கி விமானத்தைத் திருப்பி விட்டுவிட்டு, தன் உயிரை இழந்தார் என்பது அவரது தியாகம்!

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close