[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

மறு பயன்பாட்டுக்கான புடவையை கட்டி அசத்திய ஆட்சியர்

collector-wear-used-sari-makes-a-strong-green-statement

கேரளாவைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர் ஒருவர் பிறர் பயன்படுத்திய புடவையை‌‌ அணிந்து வந்த வீடியோவை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

திருவனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆட்சியர் டாக்டர் கே.வாசுகி. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் வர்கலாவில் உள்ள ஷிவகிரி மலைக் கோயிலில் மறு பயன்பாட்டுக்கான மையத்துக்குச் சென்றிருந்தார். அங்கு மற்றொருவர் பயன்படுத்திய புடவையை வாங்கிய அவர் அதனை தாம்‌ பயன்படுத்த இருப்பதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆட்சியர் வாசுகி மறு பயன்பாட்டுக்கான மையத்தில் வாங்கிய புடவையை அணிந்திருந்தார்.

இதனையடுத்து வாக்குறுதியை நிறைவேற்றி விட்டதாக கூறி வீடியோவையும் தமது பேஸ்புக்கில் பதிவிட்டார். இந்த வீடியோவை 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பகிர்ந்துள்ளனர். ஐந்து லட்சத்து 78 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர். மறு பயன்பாடு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே தாம் இந்தப் புடவையை அணிந்ததாக வாசுகி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, “ உடுத்திய பழைய புடவையை அணிவதில் எனக்கு எந்த கேவலமும் இல்லை. இதன் நோக்கமே சுற்றுச் சூழல் மாசுபாட்டை தவிர்ப்பது. இப்போது நான் அணிந்துள்ள இந்தப் புடவையானது இன்னும் 15 வருடங்கள் தாங்கும். இதனை எப்போதெல்லாம் பார்க்கிறேனோ அப்போதெல்லாம் அணிவேன்” எனக் கூறியுள்ளார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close