[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடு முழுவதும் தீபாவளி சமயத்தில் பட்டாசு வெடிக்க 2 மணிநேரம் மட்டுமே அனுமதி- உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆன்லைனில் பட்டாசுகளை விற்க தடை விதித்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS நாடு முழுவதும் பட்டாசு விற்பனைக்கோ, தயாரிக்கவோ தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.53 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.15 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS வடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS பணத்திற்காக வாக்களிப்பது தன்னைத்தானே விற்பதற்கு சமம்: வைகோ
  • BREAKING-NEWS பாஜக நோட்டுகள், டோக்கன்களை தந்து வாக்கு கேட்காது; திட்டங்களை தந்து மட்டுமே வாக்கு கேட்கும் - தமிழிசை

தீ விபத்தில் பலபேரை காப்பாற்றிவிட்டு தன் உயிரை இழந்த இளம் பெண்!

woman-saves-many-from-gurugram-fire-but-dies-as-locked-gate-traps-her

தீ விபத்தில் இருந்து பல பேரின் உயிரைக் காப்பாற்றிய இளம் பெண், தான் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள் ளது.

டெல்லி அருகில் உள்ள குருகிராமில் 70 வது செக்டாரில் உள்ளது, துலிப் ஆரஞ்ச் என்ற அடுக்குமாடி கட்டிடம். ஒன்பது மாடிகளைக் கொண்ட இந்த கட்டிடத்தில் ஒரு தளத்தில் நான்கு வீட்டுகள் உள்ளன. இங்கு 5 வது தளத்தில் வசித்து வந்தவர் ஸ்வாதி (34). இன்டீரியர் டிசைனரான இவர் தனது 4 வயது மகள் மற்றும் கணவருடன் இங்கு வசித்து வந்தார். ஆஸ்த்துமாவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் வீட்டுக்குள் புகை வருவதை உணர்ந்தார். பின்னர் தீ பிடித்து புகை பரவுவதை அறிந்த அவர், பக்கத்துவீடுகளின் கதவைத் தட்டி எல்லோருக்கும் எச்சரிக்கை செய்தார். 7 வது மற்றும் 8 வது மாடிகளில் உள்ள வீடுகளில் இருந்து அவர்கள் வெளியேற உதவினார். 

தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அரைமணி நேரம் தாமதமாக வந்தனர். அதற்குள் தீயின் புகை வேகமாக பரவியது. அவர்கள் முக்கால் மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மின் இணைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக முதல் தளத்தில் தீ பிடித்து, அந்த புகை வேகமாக பரவியுள்ளது தெரியவந்தது. 

தீயை அணைத்துவிட்டு புகை அடர்ந்து காணப்பட்டதால் சிறிது நேரத்துக்குப் பிறகு தீயணைப்பு வீரர்கள் ஒவ்வொரு தளத்துக்கும் சென்று பார்த்தனர். அப்போது ஒரு பெண் உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. அவரை மேலிருந்து கீழே தூக்கி வந்தனர். அவர்தான் எல்லோர் வீட்டிலும் எச்சரிக்கை செய்து பலரின் உயிரைக் காப்பாற்றிய ஸ்வாதி என்பது தெரிய வந்தது.

எல்லோரையும் வெளியேற சொல்லிவிட்டு ஸ்வாதி மொட்டை மாடிக்கு செல்ல நினைத்தார். மொட்டை மாடியின் கதவு பூட்டப்பட்டு இருந்ததால் அவரால் தப்பிக்க முடியவில்லை. உடனடியாக கீழே செல்ல முயன்றார். புகை அதிகமாக சூழ்ந்த தால் மூச்சுத்திணறி அவர் அங்கேயே உயிரிழந்ததாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து அவர் உடலை உடற்கூராய்வுக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். 

பலரை உயிரை காப்பாற்றிய பெண், தன் உயிரை காப்பாற்ற முடியாமல் போனது அந்தப் பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close