[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கஜா புயல் பாதிப்புக்கு பிரதமரை சந்தித்து நிவாரண நிதி கோர டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS ஓசூர் அருகே தம்பதி ஆணவக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சூடுகொண்டப்பள்ளியில் நந்தீஷ் பெற்றோரிடம் எஸ்.சி., எஸ்.டி ஆணைய துணைத்தலைவர் முருகன் விசாரணை
  • BREAKING-NEWS மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS கஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி
  • BREAKING-NEWS புதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை

“அனில் அம்பானியை காக்க மோடி உதவி” - ராஜீவ் கவுடா சாடல் 

congress-mp-rajeev-gowda-says-modi-is-trying-to-save-anil-ambani

பிரதமர் மோடி அனில் அம்பானியைக் காப்பாற்ற முயற்சிப்பதாக காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் ராஜீவ் கவுடா கருத்து தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் ராஜீவ் கவுடா , ரபேல் விமான கொள்முதல் தொடர்பான பேச்சுவார்த்தைகளின் போது 128 விமானங்களை வாங்கவும் விமானத்திற்கு விலையாக 526 கோடி ரூபாய் வழங்குவதோடு கூடுதல் விமானங்களை இந்தியாவிலேயே ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிகல் நிறுவனம் மூலம் தயாரிக்கும் வகையிலும் ஒப்பந்தங்கள் போடப்பட்டதாக தெரிவித்தார். 

ஆனால் தற்போதைய பாஜக அரசில், பிரதமர் மோடியின் பிரான்ஸ் பயணத்திற்கு பிறகு விமானங்களை வாங்குவதில் பெரிய அளவில் நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் அனுமதியின்றி மாற்றங்கள் செய்யப்பட்டு மோடியின் நண்பரான அனில் அம்பானிக்கு சாதகமான அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார். சீனாவில் கடன் வாங்கிவிட்டு திரும்ப செலுத்த முடியாமல் தவிக்கும் அனில் அம்பானியை காக்க பிரதமர் மோடி ஏன் மக்களின் பணத்தை செலவழிக்க வேண்டும் எனக் கேள்வி எழுப்பிய அவர், 3 மடங்கு அதிக விலை கொடுத்து அவ்விமானங்களை வாங்குவதின் மூலம் இந்த விமானப்படைக்கு எந்தவிதமான நன்மையும் ஏற்படப்போவதில்லை எனவும் தெரிவித்தார். 

ராகுல் காந்தியின் கருத்தை விமர்சிக்கும் மத்திய அரசு முதலில் விமான ஒப்பந்தம் தொடர்பாக வெளிப்படையாக விலைகளை தெரிவித்துவிட்டு பின்னர் ராகுல் கூறும் கருத்துக்களை விமர்சிக்கட்டும் எனவும் அவர் அப்போது தெரிவித்தார். பணமதிப்பிழப்பு நடவடிக்கை மிகப்பெரிய தோல்வியடைந்துள்ளதற்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் எனவும் அவர் அப்போது வலியுறித்தினார். கர்னாடகாவில் மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வோம் எனவும் அவர் அப்போது தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close