[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு தொடங்கியது; வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்காக முதல்வர் மீது பொய் பரப்புரை செய்தால் மக்கள் பாடம் புகட்டுவர்; அரசியல் காழ்ப்புணர்வால் கோடநாடு விவகாரத்தில் பொய் புகார் பரப்பப்படுகிறது - அமைச்சர் தங்கமணி
  • BREAKING-NEWS கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் ஆளுனரிடம் ஸ்டாலின் குற்றம்சாட்டியது அரசியல் ஆதாயத்துக்காகத்தான் - கே.பி.முனுசாமி
  • BREAKING-NEWS 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவை வாபஸ் பெற்றதால் என்ன?; என் வலிமை எனக்கு தெரியும் - கர்நாடக முதல்வர் குமாரசாமி
  • BREAKING-NEWS சென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலாலுடன் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், அதிமுக எம்.பி.க்கள் ஜெயவர்தன், வைத்திலிங்கம் சந்திப்பு
  • BREAKING-NEWS கர்நாடக அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் அறிவிப்பு

உன்னாவ் பாலியல் வழக்கில் பாஜக எம்.எல்.ஏ. தொடர்பு உண்மையே : சி.பி.ஐ

cbi-confirms-rape-charge-against-unnao-mla-kuldeep-singh-sengar

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில், பாஜக எம்.எல்.ஏ மீதான குற்றச்சாட்டை சிபிஐ உறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

உத்தரபிரதேசத்தின் உன்னாவ் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர், தன்னை பாரதிய ஜனதா எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர் மற்றும் அவரது கூட்டாளிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த ஆண்டு காவல் நிலையத்தில் புகார்‌ அளித்திருந்தார். காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காமல் ஒரு வருட காலமாக இழுத்தடித்துள்ளனர். இதனையடுத்து, சமீபத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் வீட்டின் அருகே அந்தப் பெண் தற்கொலை செய்துகொள்ள முயன்றார். அவரை மீட்ட காவல்துறையினர் மாணவியின் தந்தையான பப்பு சிங் என்பவரை விசாரணைக்கு அழைத்துச்சென்றனர். ஆனால், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பப்பு சிங் உயிரிழந்தார். இதனையடுத்து இந்த சம்பவம் விஸ்வரூபம் எடுத்தது. 

இதன் பிறகு இந்தப் பிரச்னை விஸ்வரூபம் எடுக்க தொடங்கியது. உன்னாவ் சிறுமிக்கு ஆதரவாகப் பல குரல்கள் எழத்தொடங்கின. பாஜக எம்.எல்.ஏ-வை கைது செய்யக்கோரி மாநிலம் முழுவதும் பல போராட்டங்கள் நடைபெற்றன. போராட்டங்களுக்குப் பிறகு இந்த வழக்கை அலஹாபாத் நீதிமன்றம் தாமாகவே முன் வந்து விசாரித்தது. குற்றம் சாட்டப்பட்ட எம்.எல்.ஏ-வை இதுவரை கைது செய்யாதது ஏன் எனக் கேள்வி எழும்பியது. உயர்நீதிமன்றத்தின் கேள்விக்கு பிறகு பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் கைது செய்யப்பட்டார். பிறகு இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. கடந்த சில வாரங்களாக விசாரணை மேற்கொண்டு வந்த சிபிஐ போலீசார், பாஜக எம்.எல்.ஏ மீதான குற்றச்சாட்டை சிபிஐ உறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

             

உத்திரபிரதேச போலீசார் பாஜக எம்.எல்.ஏ மற்றும் அவரது கூட்டாளிகளை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டதாக சிபிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதற்காக எஃப்.ஐ.ஆர் மற்றும் குற்றப்பத்திரிக்கையில் அவர்களது பெயர்களை சேர்க்காமல் விட்டுவிட்டதாக அவர் கூறினார். அதேபோல், ‘பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்ப கால தாமதம் செய்துள்ளனர். ரத்த மாதிரி மற்றும் துணி உள்ளிட்டவற்றை தடவியல் சோதனைக்கு அனுப்பவும் இல்லை’ என்று அந்த அதிகாரி தெரிவித்தார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close