பெங்களூருவில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்கியுள்ள விடுதியில் வருமான வரித்துறையினர் இன்று அதிரடியாக சோதனை நடத்தினர்.
குஜராத்தில் அடுத்த வாரம் மாநிலங்களவை எம்பி தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக காங்கிரஸ் எம்எல்ஏக்களை பாரதிய ஜனதா கட்சியினர் விலைக்கு வாங்கும் முயற்சியில் ஈடுபடுவதாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சுமார் 40 பேர் பெங்களூருவில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்கியுள்ள விடுதியில் வருமான வரித் துறையினர் இன்று அதிரடியாக சோதனை நடத்தினர். மேலும் கர்நாடக எரிசக்தித் துறை அமைச்சர் சிவக்குமார் வீட்டிலும் அவருக்கு தொடர்புடைய 39 இடங்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதற்கிடையில் ஒரே ஒரு மாநிலங்களவை இடத்துக்காக இது போன்ற செயல்களில் பாரதிய ஜனதா அரசு ஈடுபடுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் கருத்து தெரிவித்துள்ளார்.
அசத்திய ரிஷப், ஸ்ரேயாஸ் ஜோடி - இந்திய அணி 287 ரன் குவிப்பு
“எதிரிக்கும் உதவி செய்” - ‘அன்புதான் தமிழ்’ என்ற அமைப்பை தொடங்கினார் லாரன்ஸ்
பழைய 500 ரூபாய் நோட்டுகள் வைத்திருந்த மூதாட்டிகளுள் ஒருவர் புற்றுநோயால் உயிரிழப்பு
“தேர்தலில் நிற்க சாதிதான் தகுதியா?” - பொதுத் தொகுதிகளில் பட்டியலின மக்கள் போட்டியிடுவது சாத்தியமா?
4 மாத கர்ப்பிணிப் பெண் தற்கொலை - “மாப்பிள்ளை வீட்டார் கொன்றுவிட்டார்கள்” என புகார்