[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS சுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது
  • BREAKING-NEWS குடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு
  • BREAKING-NEWS ஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS இந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்

மாநிலங்‌களவையில் அதிமுகவினர் 2வது நாளாக அமளி: கார்த்தி சிதம்பரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தல்

day-2-of-chaos-aiadmk-mps-create-ruckus-in-parliament-hit-out-at-karti-chidambaram

ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கு தொடர்‌பாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் மீது நடவடிக்க‌ எடுக்க வலியுறுத்தி அதிமுக எம்பிகள் நாடாளுமன்ற மக்களவையில் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

இன்று காலை அவை தொடங்கியபோதே அதிமுக உறுப்பினர்கள் அவைத் தலைவர் இருக்கையை சூழ்ந்துகொண்டு முழக்கமிட்டனர். இதனால் அவை ஒத்தி வைக்கப்பட்‌டது. பின்னர் அவை கூடியபோது அதிமுக உறுப்பினர்கள் முறையான் நோட்டீஸ் வழங்கும் பட்சத்தில் கார்த்தி சிதம்பரம் குறித்து விவாதிக்க அரசு தயாராக இருப்பதாக நாடாளுமன்ற விவகாரங்கள்துறை இணையமைச்சர் முக்தார் அபாஸ் நக்வி தெரிவித்தார். இதை ஏற்க மறுத்து அதிமுகவினர் தொடர்ந்து முழக்கம் எழுபியதால் அவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. பாரதிய ஜனதாவின் தூண்டுதலினாலேயே அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபடுவதாக காங்கிரஸ் கட்சியின் குலாம் நபி ஆசாத் குற்றம்சாட்டினார். பின்னர் அவை தொடங்கி நடைபெற்று வருகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close