[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ரஜினி ஆதரவில்லை- ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை
  • BREAKING-NEWS கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
  • BREAKING-NEWS தனிநபர் வருமான வரி விகிதங்களை குறைக்க பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

உ.பி.யில் யார் முதலமைச்சர்?

who-will-next-cm-of-uttar-pradesh

உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தராகண்டில் முதலமைச்சர் பதவி யாருக்கு என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், பல்வேறு பெயர்கள் முன்னிலை பெற்று வருகின்றன.

உத்தரப்பிரதேச மாநில பாரதிய ஜனதா கட்சித் தலைவரான கேசவ் பிரசாத் மவுரியா, மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா ஆகியோர் பெயர்கள் பரிசீலிக்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கோரக்பூர் எம்.பி.யான யோகி ஆதித்யநாத் மற்றும் மற்றொரு மத்திய அமைச்சரான மகேஷ் சர்மா ஆகியோரும் போட்டியில் ‌இருப்பதாகத் தெரிகிறது.

15 ஆண்டுகளுக்கு முன்பு உத்தரப்பிரதேச பாரதிய ஜனதா முதலமைச்சராக இருந்த, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மீண்டும் முதலமைச்சராக்கப்படலாம் என்றும் கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.

உத்தராகண்ட் மாநிலத்தில் பகத்சிங் கோஷியாரி, ரமேஷ் போக்ரியால், பி.சி. கந்தூரி ஆகியோரில் ஒருவர் முதல்வராக தேர்வு செய்யப்படலா‌ம் எனத் தெரிகிறது. எனினும், அண்மையில் காங்கிரசில் இருந்து கட்சி மாறிய விஜய் பகுகுணாவும் முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஜார்கண்ட் பாரதிய ஜனதா பொறுப்பாளர் திரிவேந்திர சிங் ராவத் அல்லது உத்தரகாண்ட் மாநில பாரதிய ஜனதா தலைவர் அஜய் பாட் ஆகியோரில் ஒருவர் தேர்வு செய்யப்படவும் வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது. இவர்களில் யாருக்கு மகுடம் கிடைக்கும் என்பது பாரதிய ஜனதா‌வின் இன்றைய ஆட்சி மன்றக் குழுக் கூட்டத்தில் தெரிய வரும்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close