[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS ஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனம் ஆகும்; சோலைவனம் பாலைவனம் ஆகாது - தமிழிசை
  • BREAKING-NEWS 6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்
  • BREAKING-NEWS டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்

மாற்றுத்திறனாளிகள் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

lok-sabha-passes-bill-on-persons-with-disabilities

மாற்றுத்திறனாளிகளின் உரிமையை பாதுகாக்க வழிவகுக்கும் சட்ட மசோதா மக்களவையிலும் நி‌றைவேறி உள்ளது.

மாற்றுத்திறனாளிகள் மீது பாகுபாடு காட்டுபவர்களுக்கு 5 லட்ச ரூபாய் வரை அபராதம் மற்றும் 2 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்க மசோதா வழி செய்கிறது. அரசுப் பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீட்டை 3 சதவிகிதத்தில் இருந்து 4 சதவிகிதமாக அதிகரிக்கவும் இம்மசோதா வழிவகை செய்கிறது. தற்போது மாற்றுத் திறனாளிகளுக்கான வரையறைக்கு ஏழு வகை உடல் குறைபாடுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் நிலையில் அவை 21 ஆக உயர்த்தப்படும் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மனநலக் குறைபாடுகள், ஆட்டிசம், செரிப்ரல் பால்சி, தசைச்சிதைவு உள்ளிட்ட குறைபாடுகளும் மாற்றுத் திறனாளிகள் வரையறைக்குள் வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர் கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டை மூன்றில் இருந்து ஐந்து சதவிகிதமாக அதிகரிக்கவும் இம்மசோதா வழி செய்கிறது. மேலும் மத்திய மற்றும் மாநில அரசுத் துறைகளில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான தலைமை ஆணையர்கள் அதிகார வரம்பும் அதிகரிக்கப்பட உள்ளது.முன்னதாக மாநிலங்களவையில் நேற்று முன்தினம் நிறைவேறிய இம்மசோதா, மக்களவையில் கடைசி நாளான இன்று நிறைவேறியிருக்கிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close