[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS பிகில் திரைப்பட வெளியீட்டிற்கு தடை கோரிய வழக்கு. இன்று உத்தரவு பிறப்பிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

'வர்தா' புயலால் அந்தமானில் இருந்து 150 சுற்றுலா பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர்

150-people-rescued-from-andhaman-island

‘வர்தா’ புயல் காரணமாக அந்தமான் தீவில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளில் இருந்து இதுவரை 150 பேர் பத்திரமாக மீட்க்கப்பட்டுள்ளனர்.

வங்கக் கடலில் உருகியுள்ள வர்தா புயல் காரணமாக அந்தமான் தீவில் உள்ள ஹேவலாக் மற்றும் நீல் தீவுகளில் கடந்த சில நாட்களாக மோசமான வானிலை நிலவி வருகிறது. இதையடுத்து அந்தமான் தீவிற்கு சுற்றுலா சென்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் திரும்பி வரமுடியாமல் கடந்த 4 நாட்களாக தவித்து வருகின்றனர். குடிநீர், உணவு போன்ற அத்தியாவசிய பொருட்களுக்குக் கூட தவித்து வந்த அவர்களுக்கு அந்தமான் அரசு வேண்டிய உதவிகளை செய்து வருகிறது. அவர்களை காப்பாற்றும் பணியில் இந்திய விமானப்படையை சேர்ந்த 3 ஹெலிகாப்டர்களும் கடலோர காவல் படையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது வரை 150 சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும் எஞ்சியுள்ளவர்களை மீட்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close