[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரான்ஸில் இன்று நடைபெறும் ஜி7 நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்கிறார் பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
  • BREAKING-NEWS உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து
  • BREAKING-NEWS லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பெண் உள்பட இருவர் கேரளாவில் கைது

சேட்டிலைட் யுகத்திலும் தொடரும் கொடுமைகள்.. பெண் குழந்தை பெற்ற மனைவிக்கு மொட்டையடித்த கணவன்

woman-s-head-shaved-off-by-husband-in-laws-after-she-gave-birth-to-second-girl-child

உத்தரப்பிரதேசத்தில் இரண்டாவதாகவும் பெண் குழந்தையை பெற்றெடுத்ததால், பெண்ணின் தலையை கணவனும் மாமியாரும் சேர்ந்து மொட்டையடித்த கொடூரம் அரங்கேறியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் நானு. இவருக்கும் ரஷித்துக்கும் திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதியருக்கு 4 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் நானு தற்போது இரண்டாவதுவும் பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இதனால் நானு மீது ஆத்திரம் கொண்ட அவரது கணவன் மற்றும் மாமியார் நானுவின் தலையை மொட்டையடித்துள்ளனர். மேலும் பிறந்து 13 நாட்களே ஆன பெண் குழந்தை பாலுக்காக அழும் போது, நானுவை பால் கொடுக்க அனுமதிக்காமல் சித்தரவதை செய்துள்ளனர்.

இதுகுறித்து அங்குள்ள காவல்நிலையத்தில் நானு, தனது கணவர் மற்றும் மாமியார் மீது புகார் கொடுத்துள்ளார். காவல்துறை நானுவின் கணவர் மீதும் அவரது மாமியார் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளது. ஆனால் தனது மகள் மருமகனுடன் சேர்ந்து வாழ விரும்பிய நானுவின் தாய், வழக்கை வாபஸ் பெற்றுவிட்டார்.

இதனையடுத்து நானுவின் கணவரை காவல்நிலையத்திற்கு அழைத்த போலீசார், அவருக்கு அறிவுரை வழங்கியுள்ளனர். மேலும் தற்போது குழந்தையை பெற்றெடுத்துள்ள நானு, உடல் ரீதியில் ஆரோக்கியம் குன்றி காணப்படுவதால் அவரை மருத்துவமனை அழைத்து சென்று தேவையான உதவிகள் செய்து தரும்படியும் அறிவுறுத்தியுள்ளனர்.

தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் அரசும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இருப்பினும் பெண் குழந்தையை பெற்றெடுத்ததற்காக மனைவியை மொட்டையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close