[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பு இல்லை - கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ்
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா
  • BREAKING-NEWS தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்

ஏடிஎம் பணம் ரூ.1.37 கோடியுடன் மாயமான வேன் டிரைவர் சிக்கினார்

atm-cash-van-driver-who-fled-with-rs-1-crore-37-lakhs-on-nov-23-has-been-arrested

பெங்களூருவில் ஏடிஎம்மில் நிரப்ப கொண்டு செல்லப்பட்ட 1 கோடியே 37 லட்சம் ரூபாயுடன் தப்‌பிச் சென்ற வேன் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

பெங்களூரு கேஜி சாலையில் உள்ள பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் இருந்து, ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்புவதற்காக ரூ1.37 கோடியுடன் கடந்த 23-ஆம் தேதியன்று வேன் ஒன்று புறப்பட்டு சென்றது. ஆனால் ஏடிஎம் மையங்களுக்கு செல்லாமல் அந்த வேன் திடீரென மாயமானது.

அதனையடுத்து, வசந்த் நகரில் பணம் கடத்தி செல்லப்பட்ட வேனும்‌, சுமார் 40 லட்சம் பணம் மற்றும் துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டன.‌ மீதமுள்ள பணத்தையும் வேன் ஓட்டுநரையும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் ஓட்டுநரின் மனைவியை நேற்று கைது செய்த காவல்துறை அவரிடம் இருந்து 79 லட்ச ரூபாயை மீட்டனர். மீதமுள்ள பணத்தை தனது கணவர் டோமினிக் ஒப்படைப்பார் என அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பெங்களூரு கே.ஆர்.புரத்தில் வைத்து வேன் ஓட்டுநர் டோமினிக்கை போலீசார் இன்று கைது செய்தனர். இதுகுறித்து அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close