[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை
  • BREAKING-NEWS திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்
  • BREAKING-NEWS மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு

ஏ.டி.எம்களில் வரிசையில் நிற்க வாடகைக்கு ஆள் நியமிக்கலாம்...!

book-my-chotu-startup-offers-helpers-to-stand-in-queues-at-banks-and-atms

கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள வங்கி மற்றும் ஏ.டி.எம் மையங்களில் பணம் எடுப்பதற்காக மக்கள் கூட்டம் பல மணி நேரம் காத்துக்கிடக்கின்றது. அன்றாட தேவைக்கு பணம் எடுக்கக் கூட அலுவலகத்தில் அரை நாள் விடுப்பு எடுக்க வேண்டி நிலை ஏற்பட்டுள்ளது நம் அறிந்ததே..! இந்த குறையை போக்க ஏ.டி.எம் வரிசையில் நின்று பணம் எடுத்து கொடுப்பதற்கு இணையதளம் மூலம் ஆள் நியமிக்கலாம்.

எதையும் வியாபார கண்ணோட்டத்துடன் பார்க்கும் இந்த சமூகம், மோடியின் அதிரடி முடிவிலும் ஓர் வியாபாரத்தை தொடங்கியுள்ளது. ‘புக் மை சோட்டூ’ என்ற இணையதளம் மூலம் ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுக்க வரிசையில் நிற்கும் ஒரு நபரை வாடகைக்கு எடுக்கலாம். அந்த வரிசையில் நிற்கும் நபருக்கு பணம் எடுக்கும் சூழல் வரும் போது, அந்த நபருக்கு பதிலாக நீங்கள் வரிசையில் புகுந்து ஏ.டி.எம்மில் பணம் எடுத்துக் கொள்ளலாம். இதனால் நீங்கள் அதிக நேரம் ஏ.டி.எம் வரிசையில் நிற்க வேண்டிய தேவையில்லை.

‘புக் மை சோட்டூ’ நிறுவனம் ஏ.டி.எம் மையத்தில் அதிக நேரம் காத்திருப்பவர்களுக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்டது என நிறுவனர் சட்ஜித் சிங் பேடி கூறியுள்ளார். தற்போது இந்த சேவைக்காக அந்த நிறுவனம் ‘கேஷ் கிரஞ்ச்’ செயலி மூலம் பணம் பெற்றுக் கொள்ளத் துவங்கியுள்ளது. வரிசையில் நிற்கும் ஒரு நபருக்கு ஒரு மணி நேரத்திற்கு 90 ரூபாய் வாடகைக் கட்டணமாக செலுத்த வேண்டி இருக்கும். இந்த வசதிக்காக 18 வயதிற்கு மேற்பட்ட, நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட இளைஞர்களை பயன்படுத்தி வருவதாக ‘புக் மை சோட்டூ’ நிறுவனம் சமூகவளைதளத்தில் பதிவிட்டுள்ளது. தற்போது இந்த வசதியானது டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் மட்டும் கிடைக்கும் என ‘புக் மை சோட்டூ’ தெரிவித்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close