[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒரு நாள் எனக்கும் விடியும்; அன்று தங்க தொட்டிலில் தாலாட்டுவேன் - விஜயகாந்த்
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

மோசமான நிர்வாகத்திற்கு உதாரணமாக ரிசர்வ் வங்கி மாறிவிட்டது: மன்மோகன் சிங்

former-pm-manmohan-singh-speaks-in-rajya-sabha

பழைய ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் இன்று விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மோசமான நிர்வாகத்திற்கு உதாரணமாக ரிசர்வ் வங்கி மாறிவிட்டதாகக் குற்றஞ்சாட்டினார்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 16-ஆம் தேதி தொடங்கியது. அப்போதிலிருந்தே, பழைய ரூபாய் நோட்டு விவகாரத்தை எழுப்பி நாடாளுமன்றத்தை செயல்பட விடாமல் எதிர்க்கட்சிகள் முடக்கி வந்தன.

இந்நிலையில் இன்று காலை மாநிலங்களவை கூடிய போது பிரதமர் மோடிக்கு அவைக்கு வந்து விளக்கமளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. அதையடுத்து மாநிலங்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் 12 மணிக்கு அவை கூடிய போது, பிரதமர் மோடி மாநிலங்களவைக்கு வந்தார். அப்போது பேசிய மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி, ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பான எதிர்க்கட்சிகளின் அனைத்து கேள்விகளுக்கும் மாநிலங்களவையில் பிரதமர் விளக்கமளிப்பார் எனத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, மாநிலங்களவையில் ரூபாய் நோட்டு பிரச்னை தொடர்பான விவாதம் தொடங்கியது. முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங் பேச அவைத் தலைவர் அனுமதி வழங்கினார். தொடர்ந்து பேசிய அவர், பழைய ரூபாய் நோட்டு பிரச்னையால், ஏழை மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இந்த நடவடிக்கை குறித்து அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மோசமான நிர்வாகத்திற்கு உதாரணமாக ரிசர்வ் வங்கி மாறிவிட்டது என்று குறிப்பிட்ட மன்மோகன் சிங், நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 2 சதவிகிதம் குறையும் எனவும் தெரிவித்தார். ரூபாய் நோட்டு விவகாரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் தர பிரதமர் மோடி நடவடிக்கை எடுப்பார் என நம்புவதாவும் மன்மோகன் சிங் கூறினார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close