[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார் ப.சிதம்பரம். காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை
  • BREAKING-NEWS அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி

ரூபாய் நோட்டு சிக்கல்.. நாடாளுமன்றத்திற்கு வெளியே இன்று எதிர்க்கட்சிகள் தர்ணா

opposition-parties-plan-to-protest-outside-of-parliament

ரூபாய் நோட்டு விவகாரத்தில் நாடாளுமன்றத்திற்கு வெளியே இன்று தர்ணாவில் ஈடுபட எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

நாடு முழுவதிலும் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதனைத் தொடர்ந்து நாட்டில் சில்லறை தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இந்நிலையில் ரூபாய் நோட்டு விவகாரத்தில் நாடாளுமன்றத்திற்கு வெளியே இன்று தர்ணாவில் ஈடுபட எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவரான ஜோதிராதித்ய சிந்தியா இதனை தெரிவித்துள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக எதிர்க்க‌ட்சிகள் கூட்டாக இணைந்து குடியரசுத் தலை‌வரை ஒரு சில நாட்களில் சந்திக்கவும் திட்டமிட்டுள்ளது. இது த‌விர நாடெங்கும் போராட்டங்களை கூட்டாக மு‌ன்னெடுக்க உள்ளதாகவும் சிந்தியா கூறியுள்ளார். திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இன்று நடைபெற உள்ள தர்ணா போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாகத் தெரிகிறது.

ரூபாய் நோட்டு சிக்கல் தொடர்பாக பிரதமர் அவைக்கு நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும், ரூபாய் நோட்டு செல்லாததாக அறிவிக்கப்பட்ட தகவல் முன்கூட்டியே கசிந்ததாக கூறப்படுவது குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட அம்சங்களை எதிர்க்க‌ட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close