[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS திமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

பயணிகளுக்கு ஒரு நல்ல செய்தி ...ரயில் கட்டணம் குறைய வாய்ப்பு

rail-fares-to-be-reduced

சதாப்தி, ராஜ்தானி, துரந்தோ போன்ற அதிவேக ரயில்களின் கட்டணம் குறைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபகாலமாக பிரீமியம் ரயில்களான சதாப்தி, ராஜ்தானி, துரந்தோ ஆகியவற்றில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், கட்டணத்தை குறைத்து பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க ரயில்வே துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, ரயில்வே அதிகாரிகளிடம் ரயில்களில் உள்ள இருக்கைகள் அனைத்தும் நிரம்புவதற்கான வழிகளை ஆராய உத்தரவிட்டார். இதையடுத்து பயணத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்பு இருக்கைகள் நிரப்பப்படாமல் இருக்கும் நிலையில் கட்டணத்தை குறைத்து பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என்று ரயில்வே அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த சுரேஷ் பிரபு, ‘ரயில்களின் கட்டணத்தை உயர்த்த அதிகாரம் இருக்கும் போது அதை குறைக்கவும் அதிகாரம் இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.

இதன் மூலம்  ரயில் கட்டனம் இனி வரும் காலங்களில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close