[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது

கேரளாவில் குர்ஆன் கற்கும்படி மாணவர்களை கட்டாயப்படுத்தும் பேராசிரியர்கள்..!

kerala-college-teacher-forced-quran-studies

திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரி மாணவர்களை பேராசிரியர்கள் குர்ஆன் கற்கும்படி வற்புறுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளது.

திருவனந்தபுரம் பல்கலைக்கழக கல்லூரி மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தி குர்ஆனை அவர்களுக்கு பயிற்றுவித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கல்லூரியில் உள்ள 21 மாணவர்கள், கல்லூரி முதல்வர் முகமது அலி ஜின்னாவுக்கு கடிதம் மூலம் புகார் அளித்துள்ளனர்.

கல்லூரி பேராசிரியர்கள் “இஸ்லாமிய வரலாறு” பாடத்திட்டத்தின் பாடங்களை வகுப்பிலுள்ள மாணவர்களை கட்டாயம் படிக்கும்படி வற்புறுத்துவதாக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இப்பாட பகுதிகள் பாடத்திட்டத்தில் இல்லாத நிலையில், முஸ்லீம் அல்லாத மாணவர்கள் குர்ஆன் கற்கும் படி கட்டாய படுத்தபடுவது கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்துயுள்ளது.

திருவனந்தபுரம், மாணவர் கூட்டமைப்பு (SFI) மாவட்ட செயலாளர் ப்ரதின் சாஜ் இதுகுறித்து பேசுகையில், ஆரம்பத்தில் இந்து மத மாணவர்களுடைய கைகளில் கட்டப்பட்டிருக்கும் தாயத்துகளையும், கயிறுகளையும் பேராசிரியர்கள் நீக்கும்படி கட்டயப்படுத்தியதாகவும் சில சமயங்களில் வலுக்கட்டாயமாக அதை மாணவர்களின் கைகளில் இருந்து நீக்கியதாகவும் தெரிவித்து உள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close