[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்தது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS விநாயகர் சிலை ஊர்வலத்தில் பேசியதை நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க ஹெச்.ராஜா எதிர்ப்பு
  • BREAKING-NEWS தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
  • BREAKING-NEWS உலகின் சிறந்த கால்பந்து வீரராக லூகா மோட்ரிச் தேர்வு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.36 காசுகளாகவும் விலை நிர்யம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம்
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி

பயங்கரவாதிகளுக்கு தஞ்சம் அளிப்பவர்களை இனிமேலும் பொறுத்துக்கொள்ள முடியாது: மோடி

those-who-shelter-support-terrorism-cannot-be-spared-pm-modi

பயங்கரவாதிகளுக்கு தஞ்சம் அளிப்பவர்களை இனிமேலும் பொறுத்துக்கொள்ள முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஆஷிஷ்பாக் ராம் லீலா மைதானத்தில் தசரா கொண்டாட்டம் நடைபெற்றது. கடந்த 16ம் நூற்றாண்டில் துளசி தாசர் தொடங்கி வைத்தது முதல் இந்த விழா அங்கு கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: ‘தீமைகளை வென்று நன்மைகளைக் கொண்டாடும் நாள் விஜயதசமி. இந்த நாளில் ராவணனின் உருவ பொம்மையை எரிக்கிறோம். அதற்கு பொருள், நம்முள் இருக்கும் தீய குணங்களை எரித்து, நல்லதை வெற்றி பெற செய்ய வேண்டும் என்பதே ஆகும். இன்றைய நாளில் சமூகத்திற்கு தீமை செய்யும் ராவணன்களிடமிருந்து தேசத்தை காக்க உறுதி ஏற்போம். பயங்கரவாதத்திற்கு எதிராக முதலில் போரிட்டது ராமாயண கதாபாத்திரமான ஜடாயு தான். பயங்கரவாதம் மனிதகுலத்திற்கு எதிரானது. பயங்கரவாதிகளுக்கு தஞ்சம் அளிப்பவர்களை இனிமேலும் பொறுத்துக்கொள்ள முடியாது. பயங்கரவாதத்தை முற்றிலும் அழித்தொழிக்காமல் மனித குலத்தை காப்‌பாற்ற‌ முடியாது. பயங்கரவாத்திற்கு எதிராக அனைவரும் ஒன்றுபட வேண்டும்’ என்றார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close