[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கடந்தவாரம் நிறுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்

காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்காக வாதாட இயலாது: ஃபாலி நாரிமன் திட்டவட்டம்

cauvery-case-could-not-argue-say-fali-s-nariman

காவிரியில் நீர் திறப்பது தொடர்பான உத்தரவை கர்நாடகா பின்பற்றாதவரை அம்மாநிலத்திற்காக வாதாட இயலாது என மூத்த வழக்கறிஞர் ஃபாலி எஸ்.நாரிமன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

காவிரியில் நீர் திற‌க்க முடியாது என்பது பற்றி நீதிமன்றத்தில் எடுத்துச்சொல்லுங்கள் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா எழுதிய கடிதத்திற்கு இவ்வாறு ஃபாலி நாரிமன் பதிலளித்துள்ளார்.

இதுதொடர்பாக சித்தராமய்யாவுக்கு எழுதிய கடிதத்தை வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் உச்சநீதிமன்றத்தில் படித்துக்காட்டியுள்ளார். அதில், கர்நாடக மாநிலத்திற்காக ஆஜராகும் தாம், நீதிமன்றத்தின் அலுவலர் என்பதையும் உணர வேண்டும் என சித்தராமய்யாவை கேட்டுக்கொண்டுள்ளார்.

சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னரும் காவிரியில் நீர் திறக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதை கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள நாரிமன், அந்த உத்தரவை கர்நாடக அரசு மதித்து செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

எனவே, காவிரி விவகாரத்தில் இதற்குமேல் கர்நாடக அரசு சார்பில் நீதிமன்றத்தில் எந்த வாதத்தையும் தம்மால் முன்வைக்க இயலாது என சித்தராமய்யாவுக்கு எழுதிய கடிதத்தில் வழக்கறிஞர் ஃபாலி எஸ்.நாரிமன் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close