[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் கேசவன்
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது
  • BREAKING-NEWS கஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட விபத்துகளில் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆனது
  • BREAKING-NEWS 21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு
  • BREAKING-NEWS ‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை

விஷப் பாம்புகளிடம் 12 முறை கடிபட்டும் உயிர்வாழும் மகராஷ்டிர இளைஞர்

bought-12-snake-bite-strange-man-survived

மகராஷ்டிராவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 12-முறை வெவ்வேறு பாம்புகள் கடித்து உயிர் பிழைத்த சம்பவம் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

சோலாபூர் அருகே உள்ள விஜயபுராவைச் சேர்ந்தவர் 20 வயதான லிங்கராஜு. இவரை கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 4 பாம்புகள் கடித்துள்ளது. அதில், இருமுறை ராஜா நாகத்தால் கடிபட்ட இவர், இதற்கு முன் தனது குடும்பத்தாருடன் சோலாப்பூரில் வசித்து வந்தார்.
அங்கு அவரை 7 முறை பாம்புகள் கடித்ததாகவும் அதனால் கவலை அடைந்த அவரது பெற்றோர் அவரை ஒரு மருத்துவரிடம் கொண்டு சென்று கலந்தாலோசித்தனர். எனினும் மருத்துவ செலவிற்கு பணம் இல்லாத காரணத்தினால் வேறு இடத்திற்கு குடி பெயர முடிவெடுத்து அவர்கள் விஜயபுராவிற்கு சென்றனர். அங்கு சென்ற பின்பு அவரது பெற்றோருக்கு அதிர்ச்சி காத்திருந்தது மேலும் பாம்புகள் அவரை தொடர ஆரம்பித்தன.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 4 பாம்புகள் இவரை கடித்துள்ளது. இதைத் தொடர்ந்து இவருக்கு சிகிச்சை எதுவும் அளிக்கப் படவில்லை. எனினும் அவர் உயிருடன் வாழ்ந்து வருவது மருத்துவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து ஆயூர்வேத மருத்துவர் சோமசேகர் தெரிவிக்கையில், லிங்கராஜுவை 12 முறை வெவ்வேறு பாம்புகள் கடித்தும் சிகிச்சை எதுவும் மேற்கொள்ளாமல் அவர் உயிர் பிழைத்திருப்பது ஆச்சர்யமாகஉள்ளது என தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close