[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS திமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

டாடா குழும பொறுப்புகளிலிருந்து சைரஸ் மிஸ்த்ரி ராஜினாமா

cyrus-mistry-resigns-from-all-tata-group-companies

டாடா குழுமத்தின் அனைத்து பொறுப்புகளிலும் இருந்து சைரஸ் மிஸ்த்ரி ராஜினாமா செய்துள்ளார்.

டாடா குழுமத்தின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சைரஸ் மிஸ்த்ரி, அந்த நிறுவனத்தின் நிர்வாகம் மற்றும் பங்குதாரர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தாமாக முன்வந்து ராஜினாமா செய்வதாகத் தெரிவித்துள்ளார். டாடா நிறுவனத்தின் நலனில் அக்கறை கொண்டே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் மிஸ்த்ரி அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். டாடா குழுமத்தின் அனைத்து பொறுப்புகளில் இருந்து சைரஸ் மிஸ்த்ரியை நீக்க அசாதாரண பொதுக்குழுவை கூட்டத் திட்டமிட்டிருந்த நிலையில் இந்த முடிவினை மிஸ்த்ரி எடுத்துள்ளார். நூறு மில்லியனுக்கும் அதிகமான மதிப்பினைக் கொண்ட டாடா குழுமத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து சைரஸ் மிஸ்த்ரி கடந்த அக்டோபரில் பதவி நீக்கம் செய்யப்பட்டார். மேலும், டாடா குழுமத்தின் முக்கிய நிறுவனமான டிசிஎஸ் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளிலிருந்தும் சைரஸ் மிஸ்த்ரி நீக்கப்பட்டார். குழுமத்தின் தற்காலிகத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள ரத்தன் டாடா, சைரஸ் மிஸ்த்ரியால் நிறுவனம் இயங்க முடியாத சூழலுக்குச் சென்றுள்ளதாகவும், அவரை நீக்க பங்குதாரர்கள் உதவ வேண்டும் என்று வெளிப்படையாகவே கோரிக்கை விடுத்திருந்தார். டாடா குழுமத்தின் வரலாற்றில் டாடா குடும்பத்திற்கு வெளியில் இருந்து அதன் தலைவராகப் பொறுப்பேற்ற முதல் நபர் சைரஸ் மிஸ்த்ரி என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close