[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS கோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

ஆம் ஆத்மியுடன் பேச்சுவார்த்தை தோல்வி: டெல்லியில் காங்கிரஸ் தனித்துப் போட்டி!

congress-to-go-solo-in-delhi-blames-aap-for-failure-of-alliance-talks

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடனான பேச்சு வார்த்தை தோல்வியில்‌ முடிந்ததையடுத்து அங்கு காங்கிரஸ் தனித்துப் போட்டியிட‌ முடிவு செய்துள்ளது.

டெல்லியில் கூட்டணிக்காக ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸுக்கு இடையிலானப் பேச்சுவார்த்தை நடந்து வந்தது. ஆறு கட்டங்களாக நடந்த பேச்சுவார்த்தை பலனில்லாமல் தோல்வியில் முடிந்தது. இதற்கு டெல்லிக்கு வெளியே காங்கிரஸ் விதித்த நிபந்தனையை ஆம் ஆத்மி ஏற்காததுதான் காரணம் எனக் கூறப்படுகிறது.

இது குறித்து காங்கி‌ரஸின் டெல்லி மேலிடப் பொறுப்பாளர் பி.சி.சாக்கோ, கூறும்போது, ‘’டெல்லி காங்கிரஸ் நிர்வாகிகள் எதிர்ப்பை மீறி, ராகுல் காந்தி உத்தரவுபடி ஆத் ஆத்மியுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். டெல்லியில் மட்டுமே கூட்டணி என்ற பேசிய ஆம் ஆத்மி, ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களிலும் தொகுதிகள் ஒதுக்க கோரிக்கை வைத்தனர். இதை காங்கிரஸ் ஏற்கவில்லை.

அதனால் டெல்லியில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. டெல்லியில் மட்டும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த இப்போதும், தயாராக இருக்கிறோம்’’ என்றார்.

இந்நிலையில் ஹரியானாவில் ஜனநாயக் ஜனதா கட்சியுடன் ஆத் ஆத்மி கூட்டணி வைத்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close