[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஏற்றம்
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல்
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது

ஐடிபிஐ வங்கியில் உதவி மேலாளராக வாய்ப்பு!

idbi-recruitment-one-year-training-with-assistant-manager-job

ஐடிபிஐ வங்கியில், பயிற்சியுடன் கூடிய உதவி மேலாளர் கிரேடு ‘A’ பணிக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. PG டிப்ளமோ இன் பேங்கிங் அண்டு ஃபைனான்ஸ் என்ற ஒரு வருட பயிற்சியினை மணிப்பால் ஸ்கூல் ஆப் பேங்கிங் உடன் ஐடிபிஐ வங்கி இணைந்து இந்த பயிற்சியை வழங்க உள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

காலியிடங்கள்: 600

முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 07.07.2019
தேர்விற்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள்: 13.07.2019
கணினி வழித்தேர்வு நடைபெறும் நாள்: 28.07.2019

வயது வரம்பு: (01.06.2019 அன்றுக்குள்)
குறைந்தபட்சமாக 21 வயது முதல் அதிகபட்சமாக 28 வயது வரை இருத்தல் அவசியம்.
02.06.1991 மற்றும் 01.06.1998 என்ற தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்திற்குள் பிறந்தவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:
1. எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் - ரூ.150
2. எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் தவிர மற்ற பிரிவினர் - ரூ.700

கல்வித்தகுதி:
குறைந்தபட்ச கல்வித்தகுதியாக, அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

குறிப்பு:
கடைசி வருடம் கல்லூரியில் பயின்று கொண்டிருப்பவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில், https://idbi.onlineapplicationform.org/IDBI/ - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம்.

தேர்வு செய்யப்படும் முறை:
1. ஆன்லைன் கணினி வழித்தேர்வு
2. நேர்முகத்தேர்வு

பயிற்சி காலம்: ஒரு வருடம்

பயிற்சிக் கட்டணம்: ரூ.3,50,000

தேர்வு செய்யப்படுவோர்க்கான பயிற்சி முடிவுக்குப் பின் உதவி மேலாளர் கிரேடு ‘A’ பணியில் அமர்த்தப்படுவர்.

மேலும், இது குறித்த முழுத்தகவல்களை பெற https://www.idbibank.in/pdf/careers/Detailed-Advertisment-MGES-2019-20.pdf - என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close