[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: டெல்லி திகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு

குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய நடிகர் அருண் விஜய்: போலீசார் வழக்குப்பதிவு

actor-arun-vijay-make-car-accident-in-chennai-nungambakkam

குடிபோதையில் கார் ஓட்டிச் சென்று போலீஸ் வாகனத்தின் மீது மோதிய ‌நடிகர் அருண் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை‌ நுங்கம்பாக்கத்தில் தனியார் நட்சத்திர ‌விடுதியில் திருமண வரவேற்புக்கு சென்று விட்டு நடிகர் அருண் விஜய், மனைவியுடன் அதிகால‌ 3 மணி அளவில் காரில் வீடு திரும்பியுள்ளார். அப்போது நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தின் முன்பு நிறுத்தப்பட்ட காவல்துறை வாகனத்தின் மீது அருண் விஜய்யின் கார் மோதியது.

இதனை அடுத்து அவரிடம் விசாரணை ‌நடைபெற்றது. அதில் அருண் விஜய் குடிபோதையில்‌ கார் ஓட்டியது தெரிய வந்தது. வாகனத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர், உடனடியாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த நிலையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக பாண்டிபஜார் போக்குவரத்து காவல்துறையினர் அருண் விஜய் மீது வழக்குப்பதிவு செய்தனர். உரிய அபராத தொகை செலுத்தும் பட்சத்தில் அவரது கார் திரும்ப ஒப்படைக்கபப்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close