[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்கிம்மர் கருவி மூலம் சென்னை ஏடிஎம்களில் திருட்டு - பல்கேரிய கும்பல் கைது
  • BREAKING-NEWS சிகிச்சைக்குப் பின் ‘மாட்டிறைச்சி சர்ச்சை இளைஞர்’ முகமது பைசான் கைது
  • BREAKING-NEWS ஆங்கிலப் புத்தாண்டில் இந்து கோயில்களை திறக்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளிலிருந்து காவிரிக்கு விநாடிக்கு 8,300 கன அடி நீர் திறப்பு

ஜவுளிக்கடையில் தீ விபத்து பல லட்சம் மதிப்பிலான ‌பொருள்கள் சேதம்

the-fire-damage-to-objects-worth-several-million-javulikkatai

நெல்லை மாவட்டம் தென்காசியில் நேற்றிரவு தனியாருக்கு சொந்தமான ஜவுளிக்கடையில் தீ விபத்து ஏற்பட்டது.

புதிய பேருந்து நிலையம் செல்லும் வழியில் உள்ள அந்த ஜவுளிக்கடை 3 அடுக்குமாடிகளைக் கொண்டது. இந்நிலையில் நள்ளிரவில் பற்றிய தீ மளமளவென கடைமுழுவதும் பற்றி எரியத்தொடங்கியது. அனைத்து மாடிகளுக்கும் பரவிய தீயை கண்டு அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தென்காசி , செங்கோட்டை , கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள துணிகள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. விபத்திற்கு மின் கசிவு காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close