[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

ஐ.டி. அலுவலகத்தில் பொங்கல் கொண்டாட்டம்: கிராமங்களைப் போன்று குதூகலம்

it-companies-celebrate-pongal-festival-in-chennai

பொங்கல் பண்டிகை உற்சாகம் தமிழகமெங்கும் களைகட்டியிருக்கிறது. பொங்கல் திருநாளை தகவல் தொழில் நுட்பத் துறையினர் எவ்வாறெல்லாம் கொண்டாடுகிறார்கள் என்று இப்போது பார்க்கலாம்.

மேற்கத்திய கலாசாரத்திற்கு மெல்ல மெல்ல மாறி வருகின்றனர். நம்முடைய பாரம்பரிய விழாக்களுக்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்ற கருத்தை உடைத்திருக்கிறார்கள் தகவல் தொழில்நுட்பத் துறையினர். வெட்டவெளியில் பொங்கலை கொண்டாடும் சூழல் இல்லையென்றாலும், உள்ளரங்கிலேயே உற்சாகம் பொங்க இவர்களின் பொங்கல் கொண்டாட்டம் அரங்கேறியது.

நகரத்தில் வாழ்ந்தாலும் கிராமத்தினரைப் போல நன்றாகவே பொங்கலைக் கொண்டாட முடியும் என்று இவர்கள் நிரூபித்திருக்கின்றனர். இன்றைய தலைமுறை இணைய தலைமுறையாக மாறிவிட்டாலும் இணையில்லா இந்த திருநாளை சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர்.

பொங்கல் கொண்டாட்டத்தில் விளையாட்டு நிகழ்வுகளுக்கு இடமில்லாமலா? கரும்பை ஒடித்தல், உரி அடித்தல் போன்ற விளையாட்டுகளை உள்ளரங்கிலேயே நடத்தி அசத்திவிட்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

குடும்பத்தோடு பொங்கல் கொண்டாட வேண்டும் என்று நினைத்தாலும் பணிச்சூழல் காரணமாக அது முடியாமல் போகிறது என்ற வருத்தமும் இவர்களுக்கு இருக்கிறது. ஆனாலும் அலுவலகச் சூழலில் பொங்கல் கொண்டாடியது புது அனுபவம் என்றும், மனதுக்கு புது உற்சாகத்தையும், ஊக்கத்தையும் அளித்திருக்கிறது என்பதும் அவர்களின் கருத்தாக உள்ளது.

நம்முடைய வாழ்க்கை முறை எப்படி மாறினாலும், நமது பாரம்பரிய கலாசார நிகழ்வுகளை மறக்காமல் மனதில் நிறுத்த வேண்டும் என்பதையே இவர்களின் பொங்கல் கொண்டாட்டம் பறைசாற்றுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close