[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மாநில சுயாட்சிக் கொள்கை நிலை நிறுத்தப்பட எந்த தியாகத்திற்கும் திமுக தயார் - ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஆளுநர் குறித்து பேச சபாநாயகர் அனுமதி வழங்காததால் திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பேரவையிலிருந்து வெளிநடப்பு
  • BREAKING-NEWS கடந்த காலங்களில் திமுக- அதிமுக ஆளும் கட்சியாக இருந்தபோதும் ஆளுநர் ஆய்வு நடத்தியதில்லை- ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஆளுநரின் ஆய்வுக்கு எதிராக போராட அரசியல் கட்சிகளுக்கு உரிமை உண்டு- டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS சேலத்தில் ஆக.22 முதல் செப்.2 வரை ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது - மாவட்ட ஆட்சியர்
  • BREAKING-NEWS அதிகாரிகளை அழைத்து ஆளுநர் விவாதிப்பது அவரது எல்லையை கடந்த செயலாகும்- வைகோ
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2124 டன் கந்த அமிலம் அகற்றம்

திரைப்பட பாணியில் கொலை செய்து சிமெண்ட்டால் பூசிய கும்பல்!

murdered-gang-with-film-making

ஆவடியில் பெண் விவகாரத்தால் ஏற்பட்ட தகராறில் பூக்கடைத் தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டு, புதைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி ராமலிங்கபுரத்தை சேர்ந்தவர் சுந்தரம். ஆவடி மார்க்கெட்டில் உள்ள பூக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்த இவரை கடந்த 2 ஆம் தேதி முதல் காணவில்லை என்று அவரது தாயார் யசோதா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் சுந்தரத்திற்கும், அதேபகுதியை சேர்ந்த திவான் என்பவருக்கும் பெண் விவகாரத்தில் பிரச்னை ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

இதையடுத்து திவான் வீட்டை சோதனை செய்த போலீஸார், அங்கு புதிதாக சிமெண்ட் பூசப்பட்டு இருந்த இடத்தைக் கண்டு சந்தேகம் அடைந்துள்ளனர். பின்னர் அந்த இடத்தை சோதனை செய்து பார்த்தபோது காணமல் போன சுந்தரத்தின் உடல் உள்ளே இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் பெண் தகராறில் திவான், கோபி, வினோத் ஆகியோர் சுந்தரத்தை அடித்து கொலை செய்து, திவான் வீட்டில் புதைத்திருப்பதையும் போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். இதைத்தொடர்ந்து தப்பிச்சென்ற திவான் உள்ளிட்ட குற்றவாளிகளை போலீஸார் தீவிரமாக தேடிவருகின்றனர். ஒருவரை அடித்து கொலை செய்து வீட்டில் புதைத்த சம்பவம் ஆவடிப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close