பிரபல மராத்தி திரைப்படப் பாடகி கீதா மாலி சாலை விபத்தில் உயிரிழந்தார்.
பிரபல மராத்தி பாடகி கீதா மாலி. ஏராளமான திரைப்படங்களில் பின்னணி பாடியுள்ள இவர், தனி ஆல்பங்களும் வெளியிட்டுள்ளார். நிகழ்ச்சி ஒன்றுக்காக அமெரிக்கா சென்றிருந்த இவர், நேற்று காலை மும்பை திரும்பினார். அங்கிருந்து நாசிக் நகரில் உள்ள சொந்த ஊருக்குக் காரில் சென்றுகொண்டிருந்தார். அவர் கணவர் விஜய்யும் உடனிருந்தார்.
தானே மாவட்டத்தில் உள்ள சாஹப்பூர் அருகே, நேற்று அதிகாலை 3 மணியளவில் கார் வந்துகொண்டிருந்தபோது ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கன்டெய்னர் லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் கீதாவும் அவர் கணவரும் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து அவர்கள் சாஹ்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி கீதா உயிரிழந்தார். அவர் கணவர் விஜய்-க்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குடியுரிமை திருத்த மசோதா நகலை மக்களவையில் கிழித்த ஓவைசி
“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா
ஊராட்சித் தலைவர் பதவி ஏலம்? - மாவட்ட ஆட்சியர் விளக்கம்
நித்தியானந்தா எங்கு இருக்கிறார்? - அரசுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி
‘கேக் வேண்டாம் வெங்காய பை கொடுங்க’ - சோனியா காந்தி பிறந்தநாள் விழாவில் விநோதம்
“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா
‘வர்லாம் வர்லாம் வா...’.. 80 வயதிலும் தளராத மனம்.... யார் இந்த சுல்தான் தாத்தா..!
தாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்ஷன்: மனங்களை வென்ற வீடியோ!
பெண்களுக்கு என்ன கற்றுக்கொடுக்க வேண்டும்?: மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற பெண்ணின் அசத்தல் பதில்!