[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது
  • BREAKING-NEWS பால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

23ம் தேதி வெளியாகிறது பிகிலின் 'சிங்கப்பெண்ணே' பாடல்!

the-first-singappenney-single-from-bigil-releases-on-july-23rd

பிகில் படத்தின் 'சிங்கப்பெண்ணே' பாடல் வரும் 23ம் தேதி வெளியிடப்படும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இயக்குநர் அட்லீயுடன் விஜய் மூன்றாவது முறையாக கைகோர்த்துள்ள படம் ‘பிகில்’. ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப்படத்தில் நயன்தாரா, நடிகர் விவேக், டேனியல் பாலாஜி, யோகி பாபு, கதிர் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் முழுவதுமாக முடிவடையும் எனக் கூறப்படுகிறது. 

 ‘பிகில்’ படத்தின் போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நடிகர் விஜய் ஒரு பாடல் ஒன்றை பாடியுள்ளார் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு புகைப்படங்கள் வெளியாகின.

இதற்கிடையே பிகில் படத்தின் 'சிங்கப்பெண்ணே' எனத் தொடங்கும் பாடல் சமூக வலைதளங்களில் கசிந்தது. இந்நிலையில் 'சிங்கப்பெண்ணே' பாடல் வரும் 23ம் தேதி வெளியிடப்படும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து ட்வீட் செய்துள்ள தயாரிப்பாளர் அர்ச்சணா கல்பாத்தி, 'சிங்கப்பெண்ணே' பாடல் நம் நாட்டின் ஒவ்வொரு மகள்களுக்கும் சமர்ப்பணம் என தெரிவித்துள்ளார்

'சிங்கப்பெண்ணே' பாடல் அறிவிப்பை அடுத்து #Singappenney என்ற ஹேஸ்டேக் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close